ARTICLE AD BOX
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டம்: மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசுக்கு இளைஞர் அணி சார்பில் தொகுதிதோறும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவாலயத்தில் துணை முதலமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Feb 21, 2025 07:31 IST
திமுக அரசை மக்கள் விரைவில் வெளியேற்றுவார்கள் - அண்ணாமலை
தி.மு.க அரசை மக்கள் விரைவில் வெளியேற்றுவார்கள்; சட்டம் - ஒழுன்கு சீர்கேட்டை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆட்சி நடக்கிறது. கெட்பேக் மோடி ஹேஷ்டேக்குக்கு பதிலாக கெடவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
-
Feb 21, 2025 07:29 IST
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.