ARTICLE AD BOX
BSNL-க்கு கும்பிடு.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 425 நாள் வரை வேலிடிட்டி.. யாரு விடுவா?
தனியார் டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகளை வழங்கி கொண்டே இருக்கிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அதுவும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்கும் மூன்று சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan)ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை.
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 prepaid plan) மொத்தமாக 600ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம்.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக தினசரி லிமிட் இல்லாமல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் டேட்டாவை விரும்பும் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan)ஆனது முன்பு 395 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட சலுகை மூலம் 425 நாள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே இப்போது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 425 நாள் வேலிடிட்டி கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 850ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் சேர்க்கவில்லை பிஎஸ்என்எல் நிறுவனம்.