ARTICLE AD BOX
BSNL அதிரடி.. தினமும் ரூ.5 போதும்.. 600GB டேட்டா.. 2025 - 2026 வரை நடுவே ரீசார்ஜ் தேவையில்லை.. எந்த திட்டம்?
அடிக்கடி ரீசார்ஜ் செய்து கடுப்பான வாடிக்கையாளர்களின் கவலையை பூர்த்தி செய்யும் விதமாக, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மலிவு விலையில் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (365 days validity plan) உடன் வழங்குகிறது. கம்மி விலையில் 1 வருட வேலிடிட்டி (BSNL 1 year validity plan) நன்மையை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் 600GB டேட்டா நன்மையையும் வழங்குகிறது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம். பட்ஜெட்டில் நீண்ட நாள் திட்டத்தை தேடுகிறீர்கள் ஆனால் இந்த திட்டத்தை ஒரு முறை ரீசார்ஜ் செய்து பாருங்கள்.
பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது இந்தியாவின் நம்பகமான டெலிகாம் நிறுவனமாக மாறியுள்ளது. காரணம், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மட்டுமே இப்போது குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வகையில், 1 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும், வருடம் முழுக்க நன்மைகளை டென்ஷன் இல்லாமல் அனுபவிக்க உதவும் புதிய திட்டத்தை BSNL வழங்க துவங்கியுள்ளது.

BSNL அதிரடி.. தினமும் ரூ.5 போதும்.. 600GB டேட்டா.. 2025 - 2026 வரை நடுவே ரீசார்ஜ் தேவையில்லை:
நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது (BSNL prepaid plan) 2000 ரூபாய் விலைக்குள் வருகிறது. 2000 ரூபாய் உங்களுக்கு பட்ஜெட் கட்டணமா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம். உண்மையை சொல்ல போனால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களின் மொத்த தொகையை சேர்த்து பார்த்தால், நிச்சயம் அது ரூ. 2000 விலைக்கு மேல் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாம் இங்கு பார்க்கவிருக்கும் திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan) என்ற பெயருடன் இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. 365 நாட்களுக்கு தினசரி கட்டணமாக நீங்கள் வெறும் 5 ரூபாய் மட்டுமே செலவிட இந்த திட்டம் அனுமதிக்கிறது. அப்படியென்றால், ஒரு மாதத்திற்கு இந்த திட்டம் வெறும் 150 ரூபாய் என்ற கட்டணத்துடன் உங்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan):
இது பட்ஜெட் விலைக்குள் வந்துவிடுகிறது. சரி, இந்த பிஎஸ்என்எல் 1999 பிளான் (BSNL 1999 Plan) என்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம். இந்த திட்டம் முழுமையாக 1 வருட காலத்திற்கு செல்லுபடியாகும் 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த 365 நாள் முழுக்க, இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் என்று அணைத்து நெட்வொர்க் அழைப்புகள், லோக்கல், STD மற்றும் நேஷனல் ரோமிங் ஆகிய அனைத்து வாய்ஸ் கால்ஸ் நன்மைகளும் இதில் அடங்கும். இந்த திட்டம் தினசரி டேட்டா நன்மைக்கு பதிலாக மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது தினசரி வரம்பு எதுவும் இல்லாமல் மொத்தமாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தை நீங்கள் இப்போது ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும், அடுத்த 2026 வரை இடையில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்கிறது BSNL நிறுவனம்.