ARTICLE AD BOX
மெல்போர்ன்: 1932. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள். மெல்போர்ன் டெஸ்ட்.
இரண்டு நாட்களில் ஆட்டம் முடிந்து விட்டது.இடையில் ஒரு நாள் மழை காரணமாக முழு நாளும் ஆட்டம் தடைப்பட்டது. அடுத்த நாள் ஓய்வு தினம்.
ஆஸ்திரேலிய அறிமுக வேக பந்து வீரர் லேரிய நாஷ் 12 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து எடுத்த விக்கெட்டுக்கள் 4. இதில் 6 ஓவர்கள் மெய்டன்.

இரண்டாவது இன்னிங்சில்
இவரது பவுலிங்
7 ஓவர்கள்
4 மெய்டன்கள்
4 ரன்கள்
1 விக்கெட்
இவ்வளவு அட்டகாசமாகவும் அருமையாகவும் அறிமுக டெஸ்டில் வேக பந்துக்கள் வீசி முத்திரை பதித்த இவரது டெஸ்ட் சரித்திரம் 2 டெஸ்டுக்களுடன் முடிவுக்கு வந்தது.
இந்த வேக பந்து வீரருக்கு சமமாக ஸ்பின் பவுலிங் செய்த பெர்ட் ஐரன்மோங்கர் முதல் இன்னிங்சின் பவுலிங் சாதனை
7.2 ஓவர்கள்
5 மெய்டன்கள்
6 ரன்கள்
5 விக்கெட்டுகள்
இரண்டாவது இன்னிங்சில்
15.3 ஓவர்கள்
7 மெய்டன்கள்
18 ரன்கள்
6 விக்கெட்டுகள்
ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் 153.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக அணியின்
36 & 45
ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் முதல் இன்னிங்ஸில் இரட்டைப் பட எண் ரன்கள் எடுத்த ஒரே வீரர். 11 ரன்கள்.இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன்களான 16 எடுத்த வீரர் சித் கர்நோவ்.இந்த டெஸ்டில் மற்ற வீரர்கள் தென் ஆப்பிரிக அணியில் எடுத்தது ஒற்றைப் பட ரன் தான்.
மூன்று இன்னிங்ஸ் கண்ட இந்த் டெஸ்டில் ரன்கள் இந்த வகையில்
காட்சி அளித்தன.
0 (11) 1 (03) 2 (02) 3 (02) 4 (03 ) 5 (02) 6 (01) 8 (02) 9(01)
இந்த டெஸ்டின்.அணியில் இருந்தும் டான் ப்ராட்மன் பேட்டிங் ஆடவில்லை.
oooooooooooooooooooooooooooooooooooooooooo
ரஞ்சி கோப்பை போட்டிகள் துவங்கிய 25 வருட கொண்டாட்டத்தின் பொழுது ரஞ்சி கோப்பை வென்ற அணிக்கும், ரெஸ்ட் ஆஃப இந்தியா அணிக்கும் நடைப் பெறும் இரானி கோப்பை ஆட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டது 1960-61 ல்
oooooooooooooooooooooooooooooooooooooooooo
இது வரையில் ஒரு தொடரில் அதிக பட்சமாக மூன்று இரட்டை சதங்களை பதிவு செய்த ஒரே ஒரு வீரர் டான் ப்ராட்மன்.
oooooooooooooooooooooooooooooooooooooooooo
டெஸ்ட் விளையாடிய வீரர்களில் சிலரது பிறந்த தேதியும், மாதமும் ஒரே எண்ணை கொண்டதாக அமைவது உண்டு.
இங்கி லாந்து வீரர் என் எப் ட்ருஸ் பிறந்த தினம்
01.01.1875
இந்திய வீரர் பாட்கர் பிறந்த நாள் 12.12.1925.
வாசுதேவன், பெங்களூரு