ARTICLE AD BOX
Asin Tragic First Love : தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்தியா அளவில் கொடிகட்டிப் பறந்த நடிகை அசின் காதலில் வீழ்ந்த கதையை பற்றி பார்க்கலாம்.

நடிகை அசின் (Asin) இந்தியாவில ஒரு காலத்துல ரொம்ப பிரபலம். சவுத் மற்றும் நார்த் ரெண்டு பக்கமும் நடிச்சு ஸ்டார் அந்தஸ்து வாங்கிட்டு அதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர் நடிகை அசின். அவங்கள அந்த காலத்துல 'லேடி லக்கி ஆக்ட்ரஸ்'னு சினிமா துறையில கூப்பிடுவாங்க. ஏன்னா, அசின் நடிச்ச முதல் மூணு படமும் சூப்பர் ஹிட் ஆச்சு. அதுக்கப்புறம் நடிகை அசின் திரும்பி பார்க்கவே இல்ல. அசின் நடிச்ச முதல் படம் மலையாளத்துல 'Narendran Makan Jayakanthan Vaka' 2001ல ரிலீஸ் ஆச்சு. அது சூப்பர் ஹிட் ஆச்சு.

அசின் நடிச்ச முதல் படத்தோட வெற்றி அவங்கள சினிமாவுலேயே இருக்க வச்சுது. அதுக்கப்புறம் அவங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்துச்சு. சவுத் ஸ்டார் நடிகையா இருந்த அசினுக்கு பாலிவுட்லயும் நிறைய வாய்ப்பு வந்துச்சு. முதல்ல பாலிவுட்ல வந்த சின்ன சின்ன வாய்ப்பு எல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க அசின். ஆனா, அதுக்கப்புறம் அந்த காலத்து சூப்பர் ஸ்டார் சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் அமீர் கான் கூட நடிச்சு பாலிவுட்லயும் ஸ்டார் ஆனாங்க.

ஆனா, அசின் வாழ்க்கையில அந்த நேரத்துல காதல் வந்துச்சு.. பாலிவுட் நடிகர் நிதின் முகேஷ் கூட காதல்ல விழுந்த அசின், அவர கூட டேட்டிங் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா அத பத்தி மீடியாவுக்கு தெரியக்கூடாதுன்னு நடிகர் நிதினுக்கு நடிகை அசின் கண்டிஷன் போட்டாங்களாம். அவங்களுக்கு ரொம்ப நெருக்கமா இருந்த நிதின் முகேஷ் ரொம்ப பொசசிவ்வா இருந்தாங்களாம். அதே நேரத்துல நடிகை அசின் நடிகர்களான சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் கூட சினிமாவுல நடிக்கும்போது ரொம்ப க்ளோஸா இருந்தாங்க.
இதையும் படியுங்கள்... அசின், பூஜா, சுவலட்சுமி என தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன 7 ஹீரோயின்ஸ்! யார் யார் தெரியுமா?

இதனால கோபமான நடிகர் நிதின் முகேஷ், பிரஸ் மீட் கூப்பிட்டு நடிகை அசின் பத்தி பேசி அவங்க ரெண்டு பேரும் டேட்டிங் பண்ற விஷயத்த லீக் பண்ணிட்டாரு. பிரஸ் மீட்ல நடிகர் நிதின் 'அசின் ஒரு மோசடிக்காரி. அவங்க என்கிட்ட நிறைய உதவி வாங்கி இருக்காங்க. நான் அவங்களுக்கு நிறைய பண உதவி கூட பண்ணிருக்கேன். ஆனா இப்ப அவங்க கைக்கு எட்டல'ன்னு சொன்னாரு. அதோட அவங்க ரெண்டு பேரோட லவ் ஸ்டோரி முடிஞ்சுது.

அந்த நேரத்துல அசின் நடிச்ச பாலிவுட் படமும் சரியா போகல. கொஞ்ச நாள்ல நடிகை அசின் பாலிவுட்ல ஓரங்கட்டப்பட்டாங்க. அதுக்கப்புறம், சல்மான் கான் மற்றும் நடிகர் அக்ஷய் குமார் படத்துக்கு அப்புறம் அவங்களுக்கு பாலிவுட்ல கதவு மூடிட்டாங்க. அதுக்குள்ள 2010 வந்துச்சு. அங்க ஒரு சோகம் அசினுக்கு காத்துட்டு இருந்துச்சு.

அது என்னவென்றால் ஐஃபா (2010) சினிமா விழா தான். அது இலங்கையில நடந்துச்சு. அந்த நேரத்துல தமிழர்களுக்கும் இலங்கைக்கும் மனஸ்தாபம் இருந்துச்சு. அத பத்தி கவலைப்படாம இலங்கைக்கு போய் கலந்துக்கிட்ட நடிகை அசினை தமிழ் சினிமா தடை பண்ணுச்சு. தெலுங்குல வாய்ப்பு குறைஞ்சு போச்சு. ஆனா அசினுக்கு பாலிவுட்ல நிறைய ஆஃபர் இருந்துச்சு. அக்ஷய் குமார் மற்றும் சல்மான் கான் கூட நிறைய சினிமாவுல நடிச்சாங்க அசின்.
இதையும் படியுங்கள்... Asin Daughter Arin: சிண்ட்ரெல்லாவாக மாறிய அசின் மகள் அரின்! அழகில் அம்மாவையே மிஞ்சிய லேட்டஸ்ட் போட்டோஸ்!

அதுக்கப்புறம் அசின் நடிகர் சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் கூட நடிச்சு பாலிவுட்ல ஸ்டார் நடிகை ஆனாங்க. ஆனா மேல போனவங்க கீழ இறங்கி தானே ஆகணும், நிதின் பேச்சு நடிகை அசினுக்கு பிரச்சனையா வந்துச்சு. அதே நேரத்துல, 'சல்மான் கான் என்னோட பெஸ்ட் பிரண்ட் அவ்வளவுதான்.. நான் அவங்ககிட்ட எந்த உதவியும் வாங்கல. நான் சொந்த திறமையில வளர்ந்திருக்கேன்'னு அசின் சொன்னாங்க. அதனால நடிகர் சல்லு கூட தூரமா போயிட்டாரு.

தமிழ்ல விஜய், கமல் ஹாசன், சூர்யா, அஜித்னு எல்லா ஸ்டார் கூட நடிச்சிருக்காங்க. கேரளால கொச்சில பிறந்தவங்க அசின். அப்பா பிசினஸ்மேன், அம்மா சர்ஜன். அசினுக்கு சீக்கிரமா மொழிய கத்துக்கிற திறமை இருந்துச்சு, ஏழு மொழியில ஈஸியா பேசுவாங்க. முதல் சினிமாவுல நடிக்கும்போது அசினுக்கு வெறும் 15ல இருந்து 16 வயசு. அந்த சினிமா ஜெயிச்சாலும் தோத்தாலும் அதுக்கப்புறம் சிவில் எக்ஸாம் எழுதி கவர்மெண்ட் ஆபீசர் ஆகணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனா நடந்தது வேற, பெரிய சினிமா ஸ்டார் ஆயிட்டாங்க...!

நடிகை அசினுக்கு 2016ல கல்யாணம் ஆச்சு. ராகுல்ங்குற பிசினஸ்மேன் கூட லவ் மேரேஜ் பண்ணிட்டு இப்ப சந்தோஷமா இருக்காங்க. ஆனா அவங்க நடிச்ச கஜினி, சிவகாசி, போக்கிரி, வேலம், தசாவதாரம்னு நிறைய சினிமா அவங்கள யாராலயும் மறக்க முடியாத மாதிரி பண்ணிடுச்சு. இப்ப அவங்க இருக்கிறது கேரளால. இப்ப கேரளா, ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை எல்லா இடத்துலயும் அசின் ஃபேமிலி பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு. இப்ப சந்தோஷமா இருக்காங்க அசின்.
இதையும் படியுங்கள்... ஜோதிகா தான் கரெக்டா இருக்கும்.. சூர்யாவால் ஒதுக்கப்பட்ட அசின்.. செய்யாறு பாலு சொன்ன தகவல்..