ARTICLE AD BOX
இன்று சாம்பல் புதன். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கு இது முக்கியமான நாள்.
உயிர்த்தெழுதல் விழாவை நோக்கிய 40 நாள்கள் தவக்காலம் இந்த நாளில் தொடங்குகிறது. தவக்காலம் என்பது மனிதர்கள் மனம் திரும்புதலுக்கான, தங்கள் பாவங்களுக்கு வருந்துவதற்கான காலமாகும். ஈஸ்டருக்கான ஆன்மிக தயாரிப்பாக இது பார்க்கப்படுகிறது.
சாம்பல் புதன்
தவக்காலத்தின் முதல் நாளில் திருச்சபையில் பாதிரியார் மக்களின் நெற்றியில் சாம்பலைப் பூசுகிறார். குருத்தோலையில் இருந்து பெறப்பட்ட சாம்பல், மரணத்தை நினைவூட்டுவதாக உள்ளது.
விவிலியத்தின் முதல் பகுதியான தொடக்கநூலில், "நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையே சாம்பல் நினைவூட்டுகிறது.
சாம்பல் புதனிலிருந்து தொடங்கும் 40 நாள்கள் தவக்கலாம் இயேசுவின் 40 நாள்கள் உண்ணாவிரதம் மற்றும் வனாந்தரத்தில் அவர் அனுபவித்த சோதனைகளை பிரதிபளிக்கிறது.
சில கிறிஸ்தவ கலாசாரங்கள் சாம்பல் புதனுக்கு முந்தைய செவ்வாய்கிழமை விருந்து உண்ணும் பழக்கம் உள்ளது. விவிலியத்தில் சாம்பல் புதன் என்ற தினம் கிடையாது. எனினும் கிறிஸ்தவம் தொடங்கிய காலகட்டங்களில் நைசியா கவுன்சிலில் சாம்பல் புதன் மற்றும் தவகாலத்தை அணுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் தவக்காலம் தொடங்கிவந்தது. ஐந்தாம் நூற்றாண்டில், போப் கிரிகோரி தவக்கால தொடக்கத்தை புதன்கிழமைக்கு மாற்றினார்.
இந்த ஆண்டு...
இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் திருநாள் 05.03.2025 புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஈஸ்டர் திருவிழா வெவ்வேறு நாள்களில் வருவதனால் சாம்பல் புதன், பிப்ரவரி 4 முதல் மார்ச் 10 வரையிலான தேதிகளுக்குள் மாறி மாறி வரும். இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பல் எங்கிருந்து வருகிறது?
பொதுவாக முந்தைய ஆண்டு குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட ஓலைகளை எரித்து நெற்றியில் பூசுவதற்கான சாம்பலைப் பெறுகின்றனர்.
(இயேசு இறுதி நாள்களில் கழுதையில் எருசலேமுக்குள் சென்றபோது மக்கள் பனை ஓலைகளுடன் உடன் நடந்ததன் அடையாளமாக குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது)
சாம்பலில் தண்ணீர் அல்லது எண்ணெய் சேர்த்து மனம் திரும்புதல் மற்றும் இயேசுவின் மரணத்தின் அடையாளமாக நெற்றியில் சிலுவை வடிவில் பூசுகின்றனர்.
கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஆங்கிலிகன்கள், லூத்தரன்கள், மெதடிஸ்டுகள் மற்றும் சில புராட்டஸ்டன்ட் தேவாலயங்களும் சாம்பல் புதன் பாரம்பர்யத்தை பின்பற்றுகின்றனர்.
Kumbh Mela : புனித நீர் டெலிவரி டு VR குளியல் - கும்ப மேளாவில் புதிது புதிதாய் உதயமான நவீன தொழில்கள்