ARTICLE AD BOX
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் விஜய் பேசிய விஷயங்கள் தமிழக அரசியலில் சசலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு பதிலளிக்கும் விதமாக அவர் (விஜய்) சொல்வது ஒன்றும் செய்வதொன்றுமாக இருக்கிறது என விமர்சித்துள்ளார், பாஜக தலைவர் அண்ணாமலை.
விழா மேடையில் பேசிய விஜய், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை தரமாட்டோம் என மத்திய அரசு கூறுவது எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகள் சண்டைபோட்டுக்கொள்வது போல இருப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் பேசிவைத்துக்கொண்டு இணையத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுவதாகவும் பேசினார்.

Annamalai செய்தியாளர் சந்திப்பு
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "விஜய் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை சொல்லியிருக்கிறார். வாட் ப்ரோ, ஏன் ப்ரோ எல்.கே.ஜி பசங்க மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க எனக் கேட்கிறார்.
"நான் விஜய்யிடம் சொல்ல விரும்புகிறேன், Practice what you preach bro (நீங்கள் பிரசாரம் செய்வதை கடைபிடியுங்கள்), ஏன் பொய் சொல்கிறீர்கள்? உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி, நீங்கள் நடத்துகிற விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழியா, என்ன இது?
நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைக் கடைபிடிக்க வேண்டும் என விஜய்க்கு பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். எங்கேயும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே மேடையில் பொய் சொல்லலாமா?" எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.
TVK : `ஒன்றிய அரசுடன் ஒரே நேர்கோட்டில் தமிழக ஆட்சியாளர்கள்..!" - சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விஜய்