Anna Serial: சண்முகம் சொன்ன வார்த்தை; வீட்டை விட்டு வெளியேறிய பரணி! 'அண்ணா' சீரியல் அப்டேட்!

12 hours ago
ARTICLE AD BOX

வெங்கடேஷ், ரத்னாவுக்கு எதிராக போட்ட சதி வேலை அம்பலம் ஆன நிலையில் இன்று சண்முகம் சொன்ன வார்த்தையால், பரணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுபற்றி பார்க்கலாம்.
 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கிய குடும்ப சீரியல் தான் 'அண்ணா'.  நேற்றைய எபிசோடில், ரத்னா மிகவும் கோவமாக தன்னுடைய இந்த நிலைக்கு காரணம், பரணி என்று கூறிய நிலையில் என்று நடந்தேறிய பரபரப்பான காட்சிகள் குறித்து பார்க்கலாம்.

பரணி, வெங்கடேஷை கூட்டி வந்தது தான் இன்று நான் அசிங்கப்பட்டு நிற்க காரணம் என ரத்னா கூற பரணி எதுவும் பேச முடியாமல் வருத்தத்தோடு தன்னுடைய ரூம்முக்கு செல்கிறார். இதை தொடர்ந்து எல்லோரும் சாப்பிட உட்காருகிறார்கள். அப்போது பரணியை கூப்பிட, மனசு சரி இல்லாமல் போனதால் பரணி சாப்பாடு வேண்டாம் என கூறுகிறாள்.

Anna Serial: சிக்கிய வெங்கடேஷ்; பரணி மேல் விழுந்த பழி! அண்ணா சீரியல் அப்டேட்!

சாப்பிட பிடிக்காமல் எழுந்து செல்லும் சண்முகம்

அவளை விட்டுவிட்டு சாப்பிடம் மனமில்லாமல், மற்றவர்களும் எழுந்து செல்கிறார்கள். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும், சண்முகத்துக்கு ரத்னா சாப்பாடு போடுகிறாள். அப்போது இரண்டு தட்டு அவள் வைக்க, இன்னொரு தட்டு யாருக்கு என சண்முகம் கேட்க இன்னும் பரணி சாப்பிடவில்லை என்கிற தகவலை கூறுகிறாள்.

பயணியிடம் ரத்னா வாழ்க்கை பற்றி வாய் விட்ட சண்முகம்

சாப்பாட்டில் கை வைத்த ஷண்முகம், பின்னர் தனக்கும் சாப்பாடு வேண்டாம் என எழுந்து ரூமுக்குள் செல்கிறான். அங்கு அமர்ந்திருந்த பயணியிடம், ஏன் இப்போ சாப்பிடாம இருக்க என பரணியை பார்த்து கேட்க, அவள் வேண்டாம் என கூறுகிறார். பின்னர் பேச்சு வாக்கில்... எல்லோரும் வேண்டான்னு தடுத்தும் அந்த வெங்கடேசனை நீ தானே இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்த என சண்முகம் சொல்லிக்காட்ட இது பரணியை மேலும் பாதிக்கிறது.

Anna Serial: ரத்னா கழுத்தில் கத்தியை வைத்த வெங்கடேஷ்; பரபரப்பான காட்சிகளுடன் 'அண்ணா சீரியல்' அப்டேட்!

உடனே பரணி முத்துபாண்டியையும் நான் தான் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன், இன்னைக்கு அவனும் இசக்கியும் நல்லா வாழலையா? அதே மாதிரி ரத்னா வாழ்க்கையும் நல்லா இருக்கனும்னு நினைச்சு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். இது உங்க யாருக்குமே புரியல என ஆதங்கத்தை கொட்டுகிறாள். அதே போல் ஏற்கனவே ஒருமுறை, இனி என்னால் தான் உன் தங்கை வாழ்க்கை வீணாகி விட்டது என சொன்னால் இனிமேல் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என பரணி சொன்ன நிலையில், மீண்டும் சண்முகம் இப்படி பேசியதால் வீட்டை விட்டு செல்ல தயாராகிறாள்.

தன்னுடைய பெட்டி மற்றும் துணிமணிகளை எடுத்து கொண்டு, பரணி செல்ல நினைக்கும் நிலையில்... வீட்டுல் உள்ள அனைவரும் தடுத்தும் கூட அவள் வீட்டை விட்டு வெளியேறி சௌந்தர பாண்டி வீட்டுக்கு செல்கிறாள். இந்த நிலையில், பரணி எடுக்கப்போகும் முடிவு என்ன? சௌந்தர பாண்டி தான் இந்த பிரச்சனைக்கு சூத்திரதாரி என்பது தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read Entire Article