ARTICLE AD BOX
Anikha surendran: தனுஷோட நடிச்சது வாவ்.. ஆனா விஜய்தான் ஃபேவரிட்.. அனிகாவோட ஆசை நிறைவேறுமா?
சென்னை: தமிழ். மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிக்களை கவர்ந்தவர். தமிழில் அஜித்துடன் அடுத்தடுத்து என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தொடர்ந்து மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய 14 வயதிலேயே சமூக வலைதளங்களில் தன்னுடைய போட்டோஷுட் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இந்த போட்டோஷுட் புகைப்படங்களில் கவர்ச்சியை தூக்கலாக கொடுத்தார். அவரது இந்த முயற்சி அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து வருகிறது.

நடிகை அனிகா சுரேந்திரன்: நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கியவர். தமிழ், மலையாள மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் மாஸ் காட்டியுள்ளார். தமிழில் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவருடைய மகளாக நடித்து அவருடைய ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்கவில்லை என்ற போதிலும் தன்னுடைய 14 வயதிலேயே சமூக வலைதளங்களில் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
ஷாக் கொடுத்த அனிகா: தொடர்ந்து தன்னுடைய பாதையை கவர்ச்சி ரூட்டிற்கு மாற்றினார். ஏராளமான ரசிக்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளார். இந்த அவரது முயற்சி 17 வயதிலேயே புட்டபொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து பிடி சார் படத்தில் நடித்துள்ள அனிகா சுரேந்திரன், தற்போது தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
ஃபேவரிட் ஹீரோ: இந்நிலையில் இந்தப் படம் குறித்தும் தனுஷுடன் இணைந்து நடித்தது குறித்தும் அவர் கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். தனுஷுடன் இணைந்தது குறித்து முதலில் தன்னால் நம்ப முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். தனக்கு விஜய்யுடன் நடிக்க அதிகமான விருப்பம் உள்ளதாகவும் ஆனால் அந்த ஆசை நிறைவேறுமா என்று தெரியவில்லை என்றும் அனிகா கூறியுள்ளார். தனக்கு பிரியாணி மிகவும் பிடிக்கும் என்றும் சென்னையில் பிலால் ஹோட்டல்தான் தன்னுடைய பேவரிட் இடம் என்றும் தெரிவித்துள்ளார். தான் முதல் சம்பளமாக 500 ரூபாய் மட்டுமே பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது லட்சங்களில் அவரது சம்பளம் உள்ளது.
அதை விட்டா போதும்: இதனிடையே தனக்கு உயரங்களை பார்த்தால் மிகவும் பயம் என்றும் தெரிவித்துதள்ளார். தனக்கு இனிப்புகளை சாப்பிட மிகவும் பிடிக்கும் என்றும் இந்த ஆண்டில் அதை தவிர்க்க தான் இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும் அனிகா கூறியுள்ளார். தனக்கு மலையாளம் மற்றும் தமிழ் மொழிப் படங்கள் இரண்டையும் சமமாக பிடிக்கும் என்றும் அனிகா தெரிவித்துள்ளார். தனக்கு செல்லப்பெயர் உண்டு என்றும் தன்னுடைய நண்பர்கள் என யாரும் அதைகொண்டு அழைக்க மாட்டார்கள் என்றும் ஆனால் தன்னுடைய அம்மா மட்டும் தன்னை கனி என்று அழைப்பார் என்றும் சீக்ரெட் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் ரசிக்களை கவர்ந்த அனிகாவிற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.