ARTICLE AD BOX
Airtel கஸ்டமர்கள் காட்டில் மழை.. 8 திட்டங்களில் இலவச Apple TV Plus சந்தா சேர்ப்பு.. தம்பி JioHotstar ஓரம்போ!
இரவோடு இரவாக.. பட்டித்தொட்டி எங்கும் பேசுபொருளான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) அறிமுகத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையை ஏர்டெல் (Airtel) மேற்கொண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் 8 திட்டங்களில் ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV Plus) மற்றும் ஆப்பிள் மியூசிக் (Apple Music) சேவைக்கான இலவச சந்தாக்களை சேர்த்து உள்ளது.
தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் ஆப்பிள் மியூசிக் அணுகலை வழங்குவதற்காக, ஏர்டெல் நிறுவனமானது ஆப்பிள் (Apple) நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன் கீழ் ரூ.999 முதல் தொடங்கும் ஏர்டெல் ஹோம் வைஃபை திட்டங்களின் (Airtel Home Wi-Fi plans) கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV Plus) சந்தா அணுக கிடைக்கும்.

அதே சமயம் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சேவையின் (Airtel Postpaid plans) கீழ் ரூ.999 முதல் தொடங்கும் திட்டங்களின் கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி பிளஸ் சந்தாவுடன் சேர்த்து 6 மாத இலவச ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தாவும் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு தகுதியான ஏர்டெல் ஹோம் வைஃபை திட்டங்கள்:
- 200 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் ரூ.999 திட்டம்.
- 200 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் ரூ.1099 திட்டம்.
- 200 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் ரூ.1599 திட்டம்.
- 1 ஜிபிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் ரூ.3999 திட்டம்.
இதற்கு தகுதியான ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்:
- 150ஜிபி டேட்டா மற்றும் 2 சிம் கார்டுகளை வழங்கும் ரூ.999 திட்டம்
- 190ஜிபி டேட்டா மற்றும் 3 சிம் கார்டுகளை வழங்கும் ரூ.1199 திட்டம்
- 240ஜிபி டேட்டா மற்றும் 3 சிம் கார்டுகளை வழங்கும் ரூ.1399 திட்டம்
- 320ஜிபி டேட்டா மற்றும் 4 சிம் கார்டுகளை வழங்கும் ரூ.1749 திட்டம்
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஏர்டெல் நிறுவனமானது, தனக்கு வரும் வருமானத்தை அதிகரிக்க அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை (Airtel Tariff Hike) மீண்டும் உயர்த்த.. அல்லது ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தாமலேயே தனது வருமானத்தை அதிகரிக்க 4 வகையான உத்திகளை வாடிக்கையாளர்கள் மீது கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆன கோபால் விட்டல் (Airtel MD Gopal Vittal), இந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மட்டுமே இரண்டாவது முறையாக ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வை அழுத்தமாக பற்றி பேசி உள்ளார். ஒருவேளை விலை உயர்வு சாத்தியமாகாத பட்சத்தில் ஏஆர்பியு (Averange Revenue Per User) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை நிலையாக அதிகரிக்க உதவும் 4 உத்திகளை ஏர்டெல் பின்பற்ற உள்ளது.
முதல் உத்தி - ஃபீச்சர் ஃபோன் டூ ஸ்மார்ட்போன் அப்கிரேட்ஸ்: அதாவது ஃபீச்சர் போன் பயனர்களை 4ஜி / 5ஜி நெட்வொர்க்குகள் அல்லது ஸ்மார்ட்போன்களுக்கு மாற்ற அல்லது அப்கிரேட் ஆக ஊக்குவிப்பது. இரண்டாவது உத்தி - ப்ரீபெய்டு டூ போஸ்ட்பெய்டு மைக்ரேஷன்: அதாவது ஏர்டெல் ப்ரீபெய்டு பயனர்களை போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
மூன்றாவது உத்தி - டேட்டா மானிடைசேஷன்: அதாவது டேட்டா நன்மையை பணமாக்குதலாக்க வேண்டும். நான்காவது உத்தி - சர்வதேச ரோமிங்: ஏர்டெல் நிறுவனம் சர்வதேச ரோமிங் பேக்குகளின் வளர்ச்சியை மேம்படுத்தும். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த முயற்சிகள், சாத்தியமான கட்டண திருத்தங்களுடன் இணைந்து அல்லது கட்டண திருத்தங்கள் இல்லாமல் ஏஆர்பியு வளர்ச்சியை தக்கவைக்க உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!