Airtel ரீசார்ஜ்.. கம்மி விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

20 hours ago
ARTICLE AD BOX

Airtel ரீசார்ஜ்.. கம்மி விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

News
oi-Prakash S
| Published: Wednesday, March 5, 2025, 20:29 [IST]

ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தை விட பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகள் வழங்குகிறது ஏர்டெல். எனவே தான் ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது கம்மி விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ609 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 609 plan) ஆனது ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த 60ஜிபி டேட்டாவை எப்போது வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்.

Airtel ரீசார்ஜ்.. கம்மி விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி..

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.609 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் 300 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம்(airtel rs 429 plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 77.5ஜிபி வரை டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் ரூ.5 டாக்டைம் கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 379 plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

மேலும் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Airtel prepaid recharge plans offer one month validity at affordable Price: check details here
Read Entire Article