AFG VS ENG: வாழ்வா? சாவா? போட்டி… 5 ஆண்டுகளுக்குப் பிறகு கெத்து காட்டிய இங்கி., வீரர் ஜோ ரூட்..!!

5 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பி அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான களமிறங்கினார்கள்.  இப்ராஹிம் சத்ரான் (177), சதமும், ஹஷ்மதுல்லா ஷாஹிதி  40 ரன்களும், உமர்சாய் 41 ரன்களும். முகமது நபி 40 ரன்களும் எடுத்தார்கள்.

கடைசியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் ரன்கள் குவித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிய போதும் நிதானமாக விளையாடி ஜோ ரூட் சதமடித்துள்ளார் .5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்துள்ளார் .இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 50 பந்துகளில் 76 ரன்கள் தேவை.

Read Entire Article