ARTICLE AD BOX
லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி, ஒரு அணியாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றோம்.

" எங்களுடைய நாடு இந்த வெற்றியை நிச்சயம் கொண்டாடும். நாங்கள் அடுத்த போட்டியை நோக்கி செல்கின்றோம். 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியை மீண்டும் நாங்கள் வீழ்த்தி இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் முன்னேறி வருகின்றோம். இன்றைய ஆட்டம் பல நெருக்கடிகளை கொடுத்தது."
" எனினும் சவாலான நேரத்தில் ஆட்டத்தை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. இப்ராஹிம் திறமையான வீரராக இருக்கின்றார். மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் நாங்கள் நெருக்கடியில் சிக்கினோம். ஆனால் அந்த அழுத்தத்தை அவர் சிறப்பாக கையாண்டார். எனக்கும் இப்ராஹிமுக்கும் இடையே இருந்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமான ஒன்று."
" நான் பார்த்ததிலே சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் என்றால் அது இதுதான். நல்ல முறையில் கிரிக்கெட் விளையாடினார். ரன் சேர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடினார். இதேபோன்று நல்ல முறையில் பந்து வீசி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். எங்கள் அணியில் திறமை வாய்ந்த இளம் வீரர்களும், அனுபவம் வாய்ந்த சீனியர்களும் இருக்கிறார்கள்."
"அனைவருக்கும் அணியில் என்ன பணி செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். அதை சிறப்பாக செய்கிறார்கள். தற்போது இந்த போட்டியில் கிடைத்த உத்வேகத்தை நாங்கள் அடுத்த போட்டிக்கு கொண்டு செல்வோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் இதே நம்பிக்கையுடன் நாங்கள் விளையாடுவோம். எனினும் புதிய நாள் புதிய போட்டியாக தான் அது இருக்கும். அந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்வோம். எனவே அன்றைய நாளில் எது சரியோ அதை செய்ய முயற்சி செய்வோம்" என்று அஸ்மதுல்லா ஷாகிதி கூறியுள்ளார்.