ARTICLE AD BOX
இது குறித்து பேசிய அமீர் கான், "குழந்தைகளை மையமாக வைத்துப் பல படைப்புகளை உருவாக்க விரும்புகிறேன். மகாபாரதப் புராணக்கதையை திரையில் கொண்டு வருவது என் கனவு. எனக்கு அந்தப் படைப்பில் கதாபாத்திரம் ஏற்று நடிக்க வாய்ப்புள்ளதா எனப் பார்க்கலாம். இந்தியாவில், குழந்தைகள் தொடர்பான படைப்புகள் குறைவாக உள்ளதாக உணர்கிறேன். பெரும்பாலும், நாம் பிற நாடுகளிடமிருந்து குழந்தைகள் சார்ந்த படைப்புகளை இறக்குமதி செய்து, டப் செய்து, இந்தியாவில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். நான் குழந்தைகள் சார்ந்த படைப்புகளை அதிகம் உருவாக்க விரும்புகிறேன்" எனக் கூறினார்.

தனது தயாரிப்பு மூலம் பாலிவுட் சினிமாவில் புதுமையான திறமைகளை ஊக்குவித்து படங்களை தயாரிக்க விரும்புவதாகத் தெரிவித்த அவர், "நடிகராக ஒரு நேரத்தில் ஒரு படத்தில் பணிபுரிவதில் மகிழ்ச்சியடைகிறேன். தயாரிப்பாளராக அதிக படங்களில் பணிபுரிய விரும்புகிறேன். அடுத்த மாதம் நான் 60வது வயதை அடைய உள்ள நிலையில் இனிவரும் ஆண்டுகளில் நான் அதிகமான படைப்புகளைத் தயாரித்து பல திறமை வாய்ந்தோருக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன்" எனக் கூறினார். திரைப்படத் துறையில் தான் எதிர்பார்க்கும் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் எழுத்தாளர்களை அங்கீகரிப்பது குறித்து பேசினார். தன்னைப் போன்ற படைப்பாளிகள், எழுத்தாளர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே தான் தொழில்துறையில் மாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel