9 சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள்.. அறநிலையத்துறை ஏற்பாடு

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

மகா சிவராத்திரியையொட்டி இன்று இரவு தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் 9 சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், பேரூர் பட்டீஸ்வர சாமி கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் ஆலயம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவில் ஆகிய 9 கோவில்களிலும் இந்து அறநிலையத் துறை சார்பில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 5 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு நாதஸ்வர மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. இதை தொடர்ந்து வாய்ப்பாட்டு வில்லிசை நிகழ்ச்சியுடன் பாடல்கள் பக்தி பாடல்கள் பாடப்படுகின்றன. இதன்பின்னர் இரவு 7.15 மணி அளவில் மகா சிவராத்திரி தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதை தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற உள்ளன. இதற்காக மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் எதிரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் விளையாட்டு மைதானத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Read Entire Article