ARTICLE AD BOX
புதுதில்லி: லஞ்சம் வழங்கியது குறித்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகார் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பெடரல் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதால், அதானி குழுமத்தின் ஒன்பது பங்குகள் இன்று சரிந்து முடிந்தது.
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 3.75 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் 1.78 சதவிகிதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 1.36 சதவிகிதமும், ஸங்கி இண்டஸ்ட்ரீஸ் 1.36 சதவிகிதமும், ஏசிசி 0.93 சதவிகிதமும், அதானி வில்மர் 0.90 சதவிகிதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 0.81 சதவிகிதமும், அதானி பவர் 0.47 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் 0.28 சதவிகிதமும் சரிந்தது.
இன்ட்ரா டே வர்த்தகத்தில், அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 4.25 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 4.30 சதவிகிதமும் சரிந்தது. இருப்பினும், என்டிடிவி-யின் பங்குகள் 1.35 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் 0.54 சதவிகிதமும் உயர்ந்தது.
பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆனது நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நிக்கோலஸிடம், கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகாரை வழங்குவதற்கான முயற்சிகள் குறித்து தனது நிலையை சமர்ப்பித்தது.
அதே வேளையில், அதானி கிரீன் நிறுவனமானது, செப்டம்பர் 2021 கடன் வழங்கல் தொடர்பாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பொறுப்பற்ற முறையில் தவறான பிரதிநிதித்துவங்களை வழங்கியதன் மூலம் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஃபெடரல் செக்யூரிட்டீஸ் சட்டங்களின் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியுள்ளனர் என்றது.
கடந்த ஆண்டு நவம்பரில், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அசூர் பவர் குளோபல் லிமிடெட் நிர்வாகி சிரில் கபானெஸ் ஆகியோர் மீது லஞ்சத் திட்டத்திலிருந்து எழும் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டியது.
நீதித்துறை மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ள நிலையில் அவற்றை மறுத்துள்ளது.
இதையும் படிக்க: 5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்ட ஹெக்சாவேர் டெக் பங்குகள்!