ARTICLE AD BOX

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் இன்றுடன் (பிப்ரவரி 26) முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சி மொத்தம் 45 நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சிக்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதோடு 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகனம் நிறுத்துமிடம், 2750 சிசிடிவி கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை போன்றவற்றை அரசு அமைத்துள்ளது.
கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கும்பமேளாவில் இதுவரையில் ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் என ஏராளமான முக்கிய புள்ளிகள் புனித நீராடியுள்ளனர். திரிவேணி சங்கமம் இன்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 65 கோடி பேர் புனித நீராடியதாக தகவல் வெளியாகியுள்ளது.