ARTICLE AD BOX
இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி போராடி தோல்வியடைந்துள்ளது.
இதன் மூலமாக மூன்றாவது அணியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவின் எட்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் குர்பாஸ் 6 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மற்ற 2 விக்கெட்டுகள் விரைவாக வெளியேறினாலும், மிடில் வரிசை பேட்மேன்களான கேப்டன் சாகிதி 40 ரன்கள், அஹ்மத்துல்லா 41 ரன்கள் மற்றும் நபி அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க, தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் அபாரமாக விளையாடி 146 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் என 177 ரன்கள் குவித்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது.
போராடி இங்கிலாந்து அணி தோல்வி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 12 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் டக்கட் 45 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்ததாக களம் இறங்கிய ஜெமி ஸ்மித் 9 ரன்னில் வெளியேற மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஒத்துழைப்பு தர மறுத்தார்கள்.
இதையும் படிங்க:இந்த பிரச்னையை சரி செய்யலனா.. செமி பைனல்ல பெரிய ரிஸ்க் ஆயிரும் – இந்திய முன்னாள் மேலாளர் எச்சரிக்கை
இறுதியில் ஜாஸ் பட்லர் மற்றும் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுக்க, ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் குவித்தாலும் விக்கெட்டுகள் விரைவாக இழந்ததால் கடைசி வரை போராடியும் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 317 ரன்கள் குவித்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோற்றதால் மூன்றாவது அணியாக இங்கிலாந்து இந்த தொடரில் இருந்து சோகமாக வெளியேறுகிறது.
The post 49.5 ஓவர்.. ஆப்கான் வரலாற்று வெற்றி.. 3வது அணியாக வெளியேறிய இங்கிலாந்து.. சாம்பியன்ஸ் டிராபி 2025 appeared first on SwagsportsTamil.