45 வயதில் அந்த மாதிரி காட்சி.. ஜோதிகா போட்ட கண்டிஷன்.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

3 hours ago
ARTICLE AD BOX

45 வயதில் அந்த மாதிரி காட்சி.. ஜோதிகா போட்ட கண்டிஷன்.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

News
oi-Jaya Devi
| Published: Tuesday, February 25, 2025, 17:29 [IST]

சென்னை: நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, தனது அழுத்தமான நடிப்பால் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவர், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, தியா, தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஜோதிகா, தற்போது பாலிவுட்டில் அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

சைத்தான் படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவனுடன் நடித்த ஜோதிகா தற்போது, இந்தி வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இத்தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் 28ந் தேதி வெளியாக உள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, படம் குறித்தும், தனது சினிமா வாழ்க்கை குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். அதில், தனது வயதுக்கு ஏற்ற ரோலில் மட்டுமே நடிப்பேன் என கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்.

surya jyothika bayilvan ranganathan

கண்டிஷன் போட்ட ஜோதிகா: 25 வருடங்களுக்கு முன் கதாநாயகனுடன் காதல் காட்சிகளிலும் டூயட் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை. இப்போது எனக்கு திருமணமாகி மகனும், மகளும் இருக்கிறார்கள் இப்போது எனக்கு 45 வயதாகிறது. இந்த நேரத்தில் தரமான கதைகளை கேட்டு அது எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்தில் நான் நடிப்பேன். மற்றபடி அந்த நடிகருடன் நெருக்கமாக நடிக்க வேண்டும் அந்த நடிகருடன் நடனமாட வேண்டும் என்றால், அந்தப் படத்தை நான் மறுத்து விடுகிறேன். 45 வயதில் ஒரு நடிகருடன் கட்டிப்பிடித்து நடனம் ஆடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த வயதில் எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தால் மரியாதையாக இருக்குமோ அந்த கதாபாத்திரத்தில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றார்.

காரணம் இதுதான்: இதைத்தொடர்ந்து பேசிய ஜோதிகா, மும்பையில் நான் கூடி ஏறியது பற்றி இணையத்தில் பலவிதமான செய்திகள் பரவி வருகின்றன. மும்பையில் என்னுடைய அப்பா, அம்மா இருக்கிறார்கள். அவர்களுக்கு வயதாகி விட்டது. அவர்களுடைய உடல்நிலை சரியில்லை, இந்த நேரத்தில் அவர்கள் அருகில் இருக்க வேண்டியது என் கடமை என்பதால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் நான் மும்பையில் வந்து இருக்கிறேன் என்றார்.

தரமான பள்ளி இல்லை: ஜோதிகா அம்மா, அப்பாவிற்காக மும்பைகள் குடியேறி இருப்பதாக கூற, சூர்யா குழந்தைகளின் படிப்புக்காக மும்பைகள் செட்டில் ஆனதாக கூறியிருக்கிறார். அதாவது, என் குழந்தைகள் மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். என் மகன், மகள் படிக்கக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் தரமான பள்ளிகள் இல்லை, சென்னையில் ஒன்று இரண்டு IB பள்ளிகள் உள்ளது. மும்பையில் ஏரளாமான IB பள்ளிகள் உள்ளதால் குழந்தைகளின் படிப்புக்காக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறியிருந்தார். இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி இருந்தார்.

நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படமானதைத் தொடர்ந்து தற்போது அவர் ரெட்ரோ படத்தில் நடித்துவருகிறார். இந்தபடத்தை முடித்த கையோடு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
bayilvan ranganathan talks about jyothika's new plan, நடிகை ஜோதிகா,தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பயில்வான் விளக்கி உள்ளார்
Read Entire Article