ARTICLE AD BOX
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சூடானில், கடந்த 2023ம் ஆண்டு முதல் துணை இராணுவம் - இராணுவம் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டுப்போரின் காரணமாக சூடானில் வன்முறை, வெறிச்செயல் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 20000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 1.4 கோடி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் இருந்து, ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்; காவலர் அதிர்ச்சி செயல்.. பகீர் வீடியோ வைரல்.!
அந்நாட்டில் போர் தொடங்கிய பின்னர் 61 ஆயிரம் குழந்தைகள் இடம்பெயர்ந்து இறுகின்றனர். கட்டாய திருமணம், கட்டாய பாலியல் அத்துமீறல் என இராணுவத்தின் இருதரப்பும் வன்முறையை கட்டவிழ்த்து இருக்கிறது.
பச்சிளம் குழந்தைகளான 4 வயது குழந்தைகள் முதல் பலரும் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த தகவலை ஐநாவின் யுனிசெப் அமைப்பு உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரில், சொந்த நாட்டு மக்களை கடத்தி போரில் ஈடுபடுத்தும் ஜெலன்ஸ்கி? வெளியான அதிர்ச்சி தகவல்.!