34 நாட்டின் செயற்கைக் கோள்களை ஏவி ரூ.1,260 கோடி வருவாய் ஈட்டியது இந்தியா

3 hours ago
ARTICLE AD BOX

Published : 15 Mar 2025 09:42 AM
Last Updated : 15 Mar 2025 09:42 AM

34 நாட்டின் செயற்கைக் கோள்களை ஏவி ரூ.1,260 கோடி வருவாய் ஈட்டியது இந்தியா

<?php // } ?>

புதுடெல்லி: இந்தியா கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 34 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவி ரூ.1260 கோடி அந்நிய செலாவணி ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் விண்வெளித்துறையை கவனிக்கும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் 34 நாடுகளின் 393 செயற்கைக்கோள்கள் மற்றும் 3 இந்திய வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்கள் வர்த்தக ரீதியாக இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, எல்விஎம்3 மற்றும் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 232 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. 83 செயற்கைக்கோள்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவை. மற்றவை சிங்கப்பூர், கனடா, கொரியா, லக்ஷம்பர்க், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், இஸ்ரேல், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்தவை.

விண்வெளித்துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட 61 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. விண்வெளித்துறையில் இந்தியா தற்போது மிகப் பெரிய நாடாக உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலமும், சூரியன் ஆய்வு திட்டத்துக்கு ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பியதன் மூலமும் விண்வெளித்துறையில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு இந்தியா தயாராகி கொண்டிருக்கிறது. இத்திட்டத்தில் விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். விண்வெளி மையத்தில் ‘பாரதிய அந்தரிக்ஷா விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுகள் அமைக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய வீரர் அனுப்பப்படுவார். விண்வெளித்துறை கடந்த 2020-ம் ஆண்டு தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. தற்போது இத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வலுவான தூண்களாக உருவாகியுள்ளன. இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article