ARTICLE AD BOX
Published : 15 Mar 2025 06:32 AM
Last Updated : 15 Mar 2025 06:32 AM
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.65,840 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை அதிகரித்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.8,230-க்கும், ஒரு பவுன் ரூ.65,840-க்கும் விற்பனையானது. பின்னர், மாலை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.8,300-க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.66,400-க்கும் விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.1,440 அதிகரித்துள்ளது.
இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.71,824-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.110-ல் இருந்து ரூ.2 அதிகரித்து ரூ.112-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக இருந்தது.
விலை உயர்வு குறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “அமெரிக்கவில் பங்குச் சந்தை 1.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், பெரு முதலீட்டாளர்களின் பார்வை தங்கம் பக்கம் திரும்பி உள்ளது. எனவே, தங்கம் கொள்முதல் அதிகரித்து உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு இது காரணமாக அமைந்துள்ளது. இந்த விலை உயர்வு சில நாட்களுக்கு தொடரும்” என்றார். தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதை கண்டு நகை வாங்குவோர் கவலை அடைந்து உள்ளனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சி: சென்னையில் நாளை நடைபெறுகிறது
- Live Updates: தமிழக வேளாண் பட்ஜெட் 2025-26 முக்கிய அம்சங்கள்
- போரை முடிவுக்கு கொண்டுவர ஆதரவளிக்கும் மோடிக்கு ரஷ்யா, உக்ரைன் நன்றி: ட்ரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை
- ஜம்மு காஷ்மீரில் ரூ.18 ஆயிரம் கோடி நிலம் ஆக்கிரமிப்பு