பெண்கள் வீட்டிலிருந்தே செமையா சம்பாதிக்கலாம்! ரூ.500-இல் தொடங்கக்கூடிய அசத்தல் தொழில்!

4 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

பெண்கள் வீட்டிலிருந்தே செமையா சம்பாதிக்கலாம்! ரூ.500-இல் தொடங்கக்கூடிய அசத்தல் தொழில்!

News

இப்போல்லாம் கல்யாணம், காதுகுத்து, வளைகாப்புன்னு எந்த விசேஷமா இருந்தாலும் மெஹந்தி போடாம யாருமே இருக்குறது இல்ல. அதுவும் பொண்ணுங்களுக்கு கை நிறைய மெஹந்தி போட்டாலே ஒரு தனி அழகு தான்! இதையே ஒரு பிசினஸா பண்ணா எப்படி இருக்கும்? இதுக்கு பெருசா முதலீடு எதுவும் தேவைப்படாது/ உங்ககிட்ட நல்ல வரையிற திறமை இருந்தாலே போதும். இந்த பதிவுல ஒரு மெஹந்தி பிசினஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு என்னென்ன தேவை? எதையெல்லாம் செஞ்சா நீங்க பேமஸ் ஆகலாம்? எப்படி எல்லாம் மார்க்கெட்டிங் பண்ணனும்? அப்படிங்கற விவரங்களை பார்ப்போம்.

மெஹந்தி பிசினஸ்க்கு என்னென்ன தேவை?:

மெஹந்தி கோன்ஸ்: முதல்ல மெஹந்தி கோன் ரெடி பண்ணனும். குறிப்பா கடையில வாங்காம எந்த வித கெமிக்கலும் இல்லாம இருந்துச்சுன்னா குழந்தைகளுக்கு கூட நீங்க தாராளமா மெஹந்தி போடலாம். இது பண்றது ரொம்ப ஈஸி. மருதாணி இலைகள் பெரும்பாலான வீடுகள்-ல இருக்கும். இந்த இலைகளை பறிச்சு, உலர்த்தி, பவுடர் பண்ணி கரெக்டான அளவு தண்ணி கலந்து கோன் பேப்பர் வாங்கி.. அதுல போட்டு யூஸ் பண்ண வேண்டியதுதான். ஆனா நீங்க மெஹந்தி கோன் ரெடி பண்றதுக்கு புதுசு அப்படின்னா கண்டிப்பா ஒரு பயிற்சி எடுத்துட்டு ரெடி பண்ணுங்க.

பெண்கள் வீட்டிலிருந்தே செமையா சம்பாதிக்கலாம்! ரூ.500-இல் தொடங்கக்கூடிய அசத்தல் தொழில்!

டிசைன் புக்: இப்போல்லாம் விதவிதமான டிசைன்ஸ்-ல மெஹந்தி போடுறாங்க. அதேபோல புதுப்புது டிசைன்ஸும் வந்துட்டே இருக்கு. அரபிக் டிசைன்ஸ், மண்டேலா டிசைன்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஏன் இன்னும் சில மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பொண்ணு மாப்பிள்ளை உருவத்தையே தத்ரூபமாக வரையிறாங்க. இதனால் மெஹந்தி போட்டுக்குற நபர்களுக்கு பல ஆப்ஷன் வந்துட்டு.

Also Read
 வார இறுதியில் வந்த நல்ல செய்தி.. இன்று ஒரு நாளில் சவரனுக்கு 80 ரூபாய் குறைவு!
Today Gold rate: வார இறுதியில் வந்த நல்ல செய்தி.. இன்று ஒரு நாளில் சவரனுக்கு 80 ரூபாய் குறைவு!

பேஸ்புக், யூடியூப், ட்விட்டர்னு எல்லாத்துலயுமே மெஹந்தி டிசைன்ஸ் குவிஞ்சி கிடக்கு. எதை வேணும்னாலும் நீங்க பார்த்து அப்படியே யூஸ் பண்ணலாம். நீங்க பிகினரா இருந்தா மெஹந்தி போட யூடியூப்லையே கத்துக்கலாம். ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லி தராங்க! அப்படி இல்லனாலும் யாராவது எக்ஸ்பர்ட் கிட்ட டிரைனிங் எடுத்துட்டு இந்த பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம். அதுக்கு உங்களுக்கு கொஞ்சமாவது வரைய தெரிஞ்சிருக்கணும்.

முதலீடு இந்த பிசினஸ் ஸ்டார்ட் பண்ண பெருசா முதலீடு எதுவும் தேவைப்படாது! 500 ரூபாய்ல ஸ்டார்ட் பண்ணலாம். அதுவும் வீட்டிலேயே மருதாணி செடி இருந்தா அந்த செலவும் மிச்சம் தான். இப்ப சொல்லி இருக்க 500-மே தோராயமான கணக்கு தான். சிலர் மெஹந்தி பேப்பரை மொத்தமா வாங்கி யூஸ் பண்றாங்க. இப்படி பண்ணா இந்த செலவும் கம்மி ஆயிடும்.

Also Read
தீர்க்கதரிசி தான் வாரன் பஃபெட்! 0 பில்லியன் கையில்! பேங்க்ல போட்டா கூட வட்டி கிடைக்கும்!
தீர்க்கதரிசி தான் வாரன் பஃபெட்! 0 பில்லியன் கையில்! பேங்க்ல போட்டா கூட வட்டி கிடைக்கும்!

மார்க்கெட்டிங்: எந்த ஒரு பிசினஸா இருந்தாலும் மார்க்கெட்டிங் தான் ரொம்ப முக்கியம். நீங்க போட்ட மெஹந்தி டிசைன்ஸ் எல்லாத்தையும் போட்டோ எடுத்து உங்களோட இன்ஸ்டாகிராம், பேஸ்புக்-ன்னு எல்லாத்துலயும் போஸ்ட் போடுங்க. குறிப்பா நீங்க போடுற போஸ்ட் பாக்க நல்லா இருக்கணும். டிசைன்ஸ் தெளிவா தெரியணும். உங்க பிரெண்ட்ஸ் அண்ட் பேமிலிக்கு நீங்க மெஹந்தி பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கிறத சொல்லுங்க.

உங்க ஊர்ல இருக்க பியூட்டி பார்லர் கான்டக்ட் நம்பர் வாங்கி மெஹந்தி ஆர்டர் வந்தா இன்ஃபார்ம் பண்ண சொல்லலாம். இது உங்களோட கஸ்டமரை அதிகரிக்க ஹெல்ப் பண்ணும். ஏன்னா எல்லா மெஹந்தி எல்லா பியூட்டிஷனும் மெஹந்தி போட்றதில்லை. அப்படி இருக்கிற சமயத்துல கண்டிப்பா ஆர்டர் வந்தா உங்களுக்கு அவங்க சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதே போல உங்ககிட்ட வர ஒவ்வொரு வாடிக்கையாளரையும் தக்க வச்சிக்கிற மாதிரி உங்க டிசைன்ஸ் இருக்கணும்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்?: இந்த பிசினஸ் பொறுத்த அளவுல ஒரு கைக்கு சிம்பிளா டிசைன் போட்டாலே 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சார்ஜ் பண்ணலாம். அதுவே நீங்க கல்யாண பொண்ணுக்கு கை நிறைய மெஹந்தி போட்டீங்கன்னா.. ஒரு கைக்கு ரூ.1500-ல இருந்து ரூ.3,000 வரையும் சார்ஜ் பண்ணலாம். ஏன் இதுக்கு மேலயும் சார்ஜ் பண்ற மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. இதுல கிடைக்கிற வருமானம் நீங்க போடுற டிசைன்ஸ் பொறுத்தது. டிசைன் நல்லா இருந்தா நிறைய பேர் உங்களை தேடி வர ஆரம்பிப்பாங்க.

என்னென்ன ஆர்டர் எடுக்கலாம்?: கல்யாணம், காதுகுத்து வளைகாப்பு சடங்குன்னு எல்லா பங்க்ஷனுக்கும் ஆர்டர் எடுக்கலாம். ஒரு சில பொருட்காட்சிகள்-ல பார்த்தீங்கன்னா ஒரு மெஹந்தி ஆர்டிஸ்ட்.. மெஹந்தி போட்டுட்டு இருப்பாங்க. இது மாதிரி ஆர்டரும் எடுக்கலாம. கல்யாணத்துக்கு முன்னாடி நடக்கிற மெஹந்தி ஃபங்ஷன் ஆர்டர் எடுக்கலாம். கல்யாண பொண்ணுக்கு மட்டும் இல்லாம, அவங்க பிரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் எல்லாரோட ஆர்டரும் உங்களுக்கு கிடைக்கும்.

மெஹந்தி பிசினஸ்ல நல்லா சம்பாதிக்கலாம். ஆனா, அதுக்கு கொஞ்சம் ஹார்ட் வொர்க், கிரியேட்டிவிட்டி வேணும். நீங்க நல்லா மெஹந்தி போட கத்துக்கிட்டு, மார்க்கெட்டிங் பண்ணா, கை நிறைய காசு பாக்கலாம்!

Read Entire Article