300 கோடி கலெக்‌ஷன் கொடுத்த ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’.. சுட சுட தொடங்கியது ரீமேக் வேலைகள்…!

1 day ago
ARTICLE AD BOX

300 கோடி கலெக்‌ஷன் கொடுத்த ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’.. சுட சுட தொடங்கியது ரீமேக் வேலைகள்…!

இந்த ஆண்டு சங்கராந்தியின் போது தில் ராஜு தயாரிப்பில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சௌத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ என்ற படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சக்கைப் போடு போட்டுள்ளது. இந்த படத்தின் லாபத்தின் மூலம் தில் ராஜுவுக்கு கேம்சேஞ்சர் படத்தின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம் சரிகட்டப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய வெங்கடேஷ் “சங்கராந்திக்கு வஸ்துணாம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. அந்த படம் 2027 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு ரிலீஸ் ஆகும்” என அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி அடுத்து சிரஞ்சீவியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இதற்கிடையில் தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. தில் ராஜுவே படத்தைத் தயாரிக்க வெங்கடேஷ் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. 
Read Entire Article