ARTICLE AD BOX
சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது, பாலிவுட்டில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கோவையில் உள்ள தியான மையம் ஒன்றுக்கு சென்ற சமந்தா, அங்கு மூன்று நாட்கள் மவுன விரதத்தை கடைப்பிடித்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செல்போன் இல்லாமல், யாரிடத்திலும் பேசாமல், தனிமையாக மூன்று நாள் இருந்த அனுபவம் மிகவும் நல்லதாக இருந்ததாகவும், இது போன்ற விரதத்தை மீண்டும் கடைப்பிடிப்பேனா என்றால், கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், இதனை மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வேன் என்றும் கூறியுள்ளார். மூன்று நாட்கள் எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல், முழுவதுமாக தியானத்தில் ஈடுபட்ட சமந்தாவின் செயலை நெட்டிசன்கள், ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.