ARTICLE AD BOX
Sovereign Gold Bonds 200% profit: தங்கப் பத்திர திட்டம் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் அரசு திட்டம். 2016-17ல் வாங்கியவர்களுக்கு 193% லாபம் கிடைத்துள்ளது. தற்போதைய சூழலில் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதால், இது ஒரு நல்ல முதலீடாக இருக்கும்.

முதலீட்டாளர்கள் ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் பெறும் வழிகளில் முதலீடு செய்வதையே விரும்புகிறார்கள். ரிஸ்க் இல்லாத முதலீட்டுகள் பெரும்பாலும் அரசு திட்டங்களாக இருக்கின்றன. ஏனெனில் அவை எப்போதும் திவால் ஆவதில்லை. அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்துக்கு உறுதி கிடைக்கிறது. அந்த வகையில் 200% லாபம் கொடுக்கும் ஒரு திட்டம் இருக்கிறது.

2015ஆம் ஆண்டில் தங்கப் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தப் பத்திரங்கள் 24 கேரட் தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டவை. தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது தங்கப் பத்திரங்களின் விலையும் அதிகரிக்கும். விலை குறையும்போது குறையும். இது தவிர ஆண்டுக்கு 2.5% வட்டியையும் அரசு கொடுக்கும்.

தங்கப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் 8 ஆண்டுகள். 2016-17ஆம் ஆண்டின் IV சீரியஸ் தங்கப் பத்திரங்கள் பிப்ரவரி 2017 இல் ஒரு கிராமுக்கு ரூ.2,943 விலையில் வெளியிடப்பட்டன. அப்போது தங்கப் பத்திரங்களை வாங்கியவர்கள் தற்போது 193% லாபம் அடைந்துள்ளனர்.

8 ஆண்டுகள் முதிர்வு காலம் இருந்தாலும், 5 ஆண்டுகளில் அவற்றை விற்கும் வாய்ப்பும் கிடைக்கும். 2019-20 சீரியஸ் IV பத்திரங்கள் செப்டம்பர் 2019 இல் கிராமுக்கு ரூ.2,943 விலையில் வெளியிடப்பட்டன. தற்போது அவற்றின் மதிப்பு ரூ.8,634 ஆக உயர்ந்துள்ளது. இதிலும் 193% லாபம் கிடைக்கின்றது.

தற்போதைய சூழலில் தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை. கூடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவ்வே தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே வாங்கினாலும், முதிர்வு காலம் வரை வைத்திருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும். பணத் தேவை ஏற்பட்டால் பத்திரத்தை விற்கும் வாய்ப்பும் உள்ளது.

மத்திய அரசு இதுவரை இந்த ஆண்டுக்கான தங்கப் பத்திரங்களை வெளியிடவில்லை. தங்கம் விலை அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசு புதிய தங்கப் பத்திரங்களை எப்போது வெளியிடும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.