20 ஆண்டுகளுக்குப் பிறகு இசை ஆல்பத்தை வெளியிடும் ஆஸ்கர் விருது வென்ற நடிகர்

16 hours ago
ARTICLE AD BOX

வாஷிங்டன்,

ஹாலிவுட் நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் வில் ஸ்மித். இவர் சினிமாவில் 'தி பிரெஷ் பிரின்ஸ் ஆப் பெல்-ஏர்' என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் பேட் பாய்ஸ் , பேட் பாய்ஸ் 2 , பேட் பாய்ஸ் பார் லைப், மென் இன் பிளாக் , மென் இன் பிளாக் 2, மற்றும் மென் இன் பிளாக் 3 போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்து புகழ் பெற்றார். வில் ஸ்மித் நடித்த 'பேட் பாய்ஸ்' மற்றும் 'ரைடு ஆர் டை' ஆகிய படங்கள் வெளியான முதல் 10 நாட்களிலேயே 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது. பேட் பாய்ஸ் படம் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர் வசூலீட்டியது குறிப்பிடத்தக்கது.

56 வயதாகும் வில் ஸ்மித் 'பேஸ்ட் ஆன் எ ட்ரூ ஸ்டோரி' என்ற புதிய ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பம் வருகிற 28ம் தேதி வெளியாகவிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புதிய இசை ஆல்பம் வெளியாகிறது. கடைசியாக 2005ல் 'லாஸ்ட் அன்ட் பவுன்ட்' என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். 1980ல் இருந்து இசை ஆல்பங்களை மற்றவர்களோடு இணைந்து உருவாகி வந்தார். பின்னர், 1997ல் தனித்து இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். வரும் 28ம் தேதி வெளிவரும் இந்த புதிய ஆல்பத்தில் 14 டிராக்குகள் உள்ளன. அதில் ஏற்கனவே வெளியான சில முக்கியமான பாடல்களும் அடங்கியுள்ளன.

இந்நிலையில் புதிய ஆல்பம் குறித்து வில் ஸ்மித் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " வரும் 28ம் தேதி 'பேஸ்ட் ஆன் எ ட்ரூ ஸ்டோரி' என்ற ஆல்பம் வெளியாகிறது. தேதியை குறித்துக்கொள்ளுங்கள். சில காலமாக இதை உருவாக்கி வந்தேன். அதை உங்களுக்குக் காட்ட ஆர்வமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்..

தனது மனைவி குறித்து கிண்டல் செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை ஆஸ்கர் விருது விழா மேடையில் அவரது கன்னத்தில் அறைந்தது விவாதத்துக்குள்ளானது. "கிங் ரிச்சர்ட்" திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article