2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்: சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

5 days ago
ARTICLE AD BOX

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில், வழித்தடம் 5-ல் மாதவரம் பால் பண்ணை தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும், 39 உயர்மட்ட நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டு எந்திரங்களுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என பெயரிடப்பட்டுள்ளது.

வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில் முதல் சுரங்கம் தோண்டும் குறிஞ்சி என்ற எந்திரம் கொளத்தூர் சாய்வுதளத்தில் இருந்து கொளத்தூர் நிலையம் வரை 246 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. வரும் ஜூன் மாதம் இந்த எந்திரம் பணியை முடித்துவிட்டு வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, குறிஞ்சி எந்திரம் சீனிவாசா நகர் நோக்கி 1.06 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read Entire Article