ARTICLE AD BOX
கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடி வரும் காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்மமான நோய் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நோய் மருத்துவ துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வௌவால்களை சாப்பிட்டபோது இந்த நோய் முதன்முதலில் குறிப்பிடப்பட்டது. இதற்குப் பிறகு பரவிய இந்த நோய் வெறும் ஐந்து வாரங்களில் 50க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது. பிப்ரவரி 16 வரை ஈக்வடார் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
காய்ச்சல், வாந்தி மற்றும் உட்புற இரத்தப்போக்கு ஆகியவையே இந்த நோயின் அறிகுறிகள். பெரும்பாலான நோயாளிகள் நோய் தொடங்கிய 48 மணி நேரத்திற்குள் இறக்கின்றனர். இது சுகாதார நிபுணர்களை கவலையடையச் செய்துள்ளது. அறிகுறிகளுக்கும், இறப்புக்கும் இடையிலான குறுகிய இடைவெளி குறிப்பாக கவலை அளிப்பதாக பிகோரோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் செர்ஜ் நாகலேபடோ கூறியுள்ளார். “இந்த தாக்குதல் ஒரு சில நாட்களுக்குள் விரைவாக பலருக்கும் பரவி வருகிறது. இது பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சரியான காரணம் இன்னும் தெரியவில்லை” என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இஅந்தத்ொற்று குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆனால், அந்நாடு தொலைதூரத்தில் உள்ளதாலும், வரையறுக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பும் சிகிச்சைக்கு சவால்களை ஏற்படுத்துகின்றன.
எபோலா, டெங்கு, மார்பர்க் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய வைரஸ்களுடன் பொதுவாக தொடர்புடைய இந்த மர்மமான நோயில் “ரத்தக்கசிவு காய்ச்சலின்” அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும், பத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் சோதனைகளை நடத்திய பிறகு, விஞ்ஞானிகள் இந்த அறியப்படாத வைரஸ்களே இந்த தொற்றுநோய்க்கான காரணம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் நோயின் சரியான தோற்றம் மற்றும் தன்மை இன்னும் தெரியவில்லை.
”இது வேறு ஏதேனும் தொற்றுநோயா? அல்லது விஷக் காரணியா? என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். என்ன செய்ய முடியும், எந்த கட்டத்தில் உலக சுகாதார அமைப்பு ஆதரிக்க முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள், ஜூனோடிக் நோய்கள் என்று அழைக்கப்படுவது, அதிகரித்து வரும் கவலையாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்ற தொற்றுகள் 60% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் காடழிப்பு, பல்லுயிர் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற மனித நடவடிக்கைகள் ஆகும். இது மக்களை காட்டு விலங்குகள், அவற்றின் நோய்க்கிருமிகளுடன் நெருங்கிய தொடர்புக்குக் கொண்டுவருகிறது.
காங்கோ ஜனநாயகக் குடியரசை பொறுத்தவரை, பலவீனமான சுகாதார உள்கட்டமைப்பு மேலும் பரவுவதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்த அவசர உயர் மட்ட தலையீடுகள் தேவைப்படுகின்றன. காட்டு விலங்குகள் அல்லது புதர் இறைச்சியை உட்கொள்வது சில பகுதிகளில் ஒரு பொதுவான நடைமுறையாகும், இது எபோலா, எச்.ஐ.வி மற்றும் சார்ஸ் போன்ற நோய்கள் பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது.