ARTICLE AD BOX
பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ராகவேந்திரா. பல பாடல்களை பாடியிருக்கும் இவர், தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவர் இன்றைய தினம் ஹைதராபாத்தின் நிசாம்பேட்டையில் உள்ள வீட்டில் சுயநினைவிழந்து கிடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
2 நாட்களாக பூட்டப்பட்டுக்கிடந்த வீடு
கிட்டத்தட்ட 2 நாட்கள் அவரின் வீட்டுக்கதவு திறக்காத காரணத்தால், சந்தேகமுற்ற சக குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதனையடுத்து குடியிருப்பிற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அங்கு கல்பனா சுயநினைவு இழந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து கல்பனா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். தற்போது அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.வெளியே கிடைத்த தகவல்களின் படி, அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்