1976 -1977 வரலாறு திரும்புமா? ஆதவ் சொன்ன அஜெண்டா என்ன? வரலாற்றை விளக்கும் அய்யநாதன்!

22 hours ago
ARTICLE AD BOX

தவெக தலைவர் விஜய், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை போன்று கட்சி தொடங்கிய உடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கான தளத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆற்றிய உரை குறித்து பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய நடிரும், கட்சியின் தலைவருமான விஜய்,  1976 -1977 வரலாற்று ரீதியான ஒப்பிட்டு பேசியது என்பது நாவில் சக்கரை தண்ணீர் தடவுவது போன்றதாகும். அதுபோல் தொண்டர்களுக்கு நாம தான் அடுத்தது என்று சொல்வார்கள். நாம தான் அடுத்தது கோட்டையை பிடிக்கப் போகிறோம் என்பார்கள். இதெல்லாம் சாதாரண விஷயம்தான். 1967ல் அண்ணா ஆட்சியை பிடித்தார். அவரது அரசியல் முதிர்ச்சி என்பது என்ன? திமுக 1949ல் தொடங்கப்பட்டது. 1957ல் முதலில் தேர்தலில் நிற்கிறது. முதல் தேர்தலில் 15 இடங்கள், அடுத்து  1962ல் 48 இடங்களை வென்றது. 1967 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. இதெல்லாம் ஒரே இரவிலோ, ஒரு வருடத்திலோ நடந்தது அல்ல.

annaanna

1952- 1953 ஆண்டு முதல் திமுகவோடு இருந்து கொண்டு எம்ஜிஆர் அரசியல் செய்து கொண்டிருந்தார். 2 முறை எம்எல்ஏ ஆக இருந்ததால்தான் அந்த கட்சியை விட்டு வெளியேறுகிறார். 1962ல் பரங்கிமலை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ தோற்கடித்துவிட்டுதான் எம்ஜிஆர் வந்து நிற்கிறார். அப்படியா விஜய்? எம்ஜிஆர் பின்னாடி நெடுஞ்செழியன் உள்பட எவ்வளவு பேர் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் இளைஞர்களா?.  இவர்கள் மாற்றத்தை குறிப்பிடுவதற்காக அதேபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கான களச்சூழலை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்களா என்பதுதான் விஷயம்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?விஜய் மற்றும் எம்.ஜி.ஆர்.

1967ல் அரிசி பஞ்சம், இந்தி எதிர்ப்பு, எம்.ஜி.ஆர் சுடப்பட்டது என முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின. 1977ல் எம்ஜிஆர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொண்டர்களின் வலியுறுத்தலால் கட்சி ஆரம்பித்து, திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஜெயித்தார். பின்னர் 1977 தேர்தலில் ஆட்சியை பிடித்தார். பழைய வரலாறை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு இப்படித்தான் நடக்கப்போகிறது என்று சொன்னார்கள் என்றால், நீங்கள் முதலில் மக்களிடம் ரீச் ஆகினீர்களா? அப்படி ஆகினார்களா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் எட்டாத 40 சதவீத மக்கள் உள்ளனர். மாதம் ஆயிரம், புதுமைப் பெண், இலவச பேருந்து பயணம் போன்ற நலத்திட்ட உதவிகள் வாயிலாகத்தான் அவர்களை நாம் சென்றடைய முடியும். அவர்கள்தான் முதன்முதலில் ஜெயலலிதாவை அம்மா என்று சொன்னார்கள். அந்த மக்களின் வாழ்க்கையில் உங்களின் பங்கேற்பு வேண்டும். அதனை எப்படி உடைப்பீர்கள் விஜய்.

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பண்ணையார்கள் ஆட்சி போன்றவற்றை விஜய் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள் தான். ஆனால் இது ஓட்டாக மாறுமா என்பது சந்தேகம். 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அந்த தேர்தலின்போது பல கிராமங்களில் திமுகவுக்கு எதிராக பிரச்சாரத்திற்காக சென்றபோது மக்கள் எங்களை அடிக்க வந்துவிட்டனர். காரணம் கலைஞர் போய்விட்டார் என்றால் 100 ரூபாய் ஏரிவேலை திட்டம் போய்விடும் என்றனர். அந்த 100 ரூபாயும் போய்விட்டது என்றால் என்ன செய்வது என்று தாக்க முயன்றனர். தமிழகத்தில் இன்றைக்கு மக்களின் வாழ்க்கையில் நான் இதை செய்வேன் என்று நீங்கள் சொல்கிற உறுதிமொழிதான் அவர்களது வாக்குகளை பெற உதவும். மற்றவை எதுவும் எடுபடாது.

விசிகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மவுனத்தை கலைத்த ஆதவ் அர்ஜூன்

தவெக 2வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை விமர்த்து பேசுகிறார். அவருடைய பேச்சு எல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. படிக்காத மக்கள் இருக்கிறார்கள். ஆனால் சிந்திக்க தெரியாதவர்கள் கிடையாது. நமது அரசியல்வாதிகள் செய்யும் மிகப்பெரிய தவறு நமது மக்கள் சிந்திக்க திராணி அற்றவர்கள் என்று நினைக்கின்றனர். விஜயின் வாக்கு வங்கி எங்கே உள்ளது என்றால் குடும்ப சுமையை ஏற்காத இளைஞர்களிடம் தான் உள்ளது. இதை தாண்டி வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்றால், இன்னும் ஆழமாக யோசிக்க வேண்டும். அதில் இதுபோன்ற பேச்சுக்கள் எடுபடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article