ARTICLE AD BOX
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர், பீர்க்கான்காரனை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் அலெக்ஸாண்டர். இவர் இயற்கை எய்திவிட்டார். அலெக்ஸாண்டருக்கு கலாவதி என்ற மனைவியும், 14 வயதுடைய ஜோஷுவா என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ஜோஷுவா பீர்க்கான்காரனை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த பிப்.27 அன்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்று மீண்டும் வீட்டுக்கு வந்த ஜோஷுவா, சோர்வுடன் காணப்பட்டுள்ளார். மேலும், அவர் வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: காதல் ஜோடிக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இரயில் மோதி நடந்த சோகம்.!
சிறுவன் தற்கொலை
மேலும், சிறுவனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதால் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் இணைந்து, தான் செய்யாத தவறுக்கு தன்னை பழிஎற்றுக்கொள்ள வற்புறுத்துவதாகவும், அதனை மறுத்தால் டிசி கொடுப்பதாகவும் மிரட்டுகின்றனர். இதனால் வழியின்றி உயிரை மாய்கிறேன் என கூறப்பட்டு இருந்தது.
இதனை அறிந்த காவல்துறையினர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுத்தாயி, உதவி தலைமை ஆசிரியர் உஷா, நிர்வாகத்தை சேர்ந்த மேரி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், சிறுவன் எதற்காக மிரட்டப்பட்டார்? என விசாரணை நடந்து வருகிறது.
கணவரை இழந்து பிள்ளையுடன் வாழ்ந்து வந்தேனே, என் பிள்ளையும் இன்று என்னைவிட்டு போய்விட்டானே என தாய் குமுறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: கஞ்சா பழக்கத்தை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்; 11ம் வகுப்பு மாணவர் மீது பள்ளி வளாகத்தில் தாக்குதல்., கொலை முயற்சி.!