ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானதுஇன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து காத்து இருக்கிறது. அதேபோல இந்த போட்டியை வென்று பைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியா அணியும் முனைப்பு காட்டுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டியானது இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக 2015 உலகக்கோப்பை, அரை இறுதி மற்றும் 2023 உலக கோப்பை இறுதிப் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இந்த நிலையில் துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டியில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. இதனால் 14 ஆண்டு கால மோசமான வரலாற்றை இந்திய அணி மாற்றுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.