ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். ஆடுகளம் மிகவும் காய்ந்து இருப்பதால் முதலில் ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்துவோம் என்று அவர் கூறினார்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் வருண் சக்கரத்தின் உட்பட நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். இந்த சூழலில் அரையிறுதி போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடி வந்தனர்.
ஜாம்பவானின் மறைவு யார் இந்த சிவால்கர்?
முதலில் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மை காரணம் அது கிடையாது. மும்பையை சேர்ந்த பிரபல சுழற் பந்துவீச்சாளர் சிவால்கர் என்ற வீரர் இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.
இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஒரு ஜாம்பவானாக விளங்கி இருக்கிறார்.
124 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சிவால்கர், 589 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சு சராசரி வெறும் 19 என்ற அளவில் வைத்திருக்கிறார். குறிப்பாக 1972 – 73 ரஞ்சித் கோப்பையின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடியது.
இந்திய வீரர்கள் இரங்கல்:
அப்போது முதல் இன்னிங்ஸில் 16 ரன்களை விட்டுக் கொடுத்து எட்டு விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளையும் சிவால்கர் வீழ்த்தியுள்ளார்.சிவால்கர் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், தம் வாழ்நாளில் சிவால்கரை இந்திய அணியில் விளையாட வைக்காமல் போனது நினைத்து நான் மிகுந்த வருத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கம்பீர் திட்டத்தை கையில் எடுத்த ஆஸி.. யாரும் எதிர்பார்க்காத முடிவு.. இந்திய அணிக்கும் சாதகம்
தேர்வு குழுவினருடன் எவ்வளவு கெஞ்சியும் சிவால்கரை என்னால் இந்திய அணியில் சேர்க்க முடியவில்லை என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். சிவால்கரின் மறைவுக்கு பி சி சி ஐ தலைவர் ரோஜர் பின்னி, இந்திய கிரிக்கெட் ஒரு ஜாம்பவானை இழந்துவிட்டது என்று கூறி இரங்கல் தெரிவித்து இருக்கின்றார். சிவால்கரின் மறைவை ஒட்டி தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ச் அணிந்து விளையாடி வருகின்றனர்.
The post CT 2025: ஆஸி எதிரான செமி பைனலில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த இந்திய அணி.. காரணம் என்ன.? appeared first on SwagsportsTamil.