135 பவுன் தங்க நகை.. தனியாரில் மறு அடகு வைத்த தூத்துக்குடி பெண்.. மொத்தமாக போச்சு

4 hours ago
ARTICLE AD BOX

135 பவுன் தங்க நகை.. தனியாரில் மறு அடகு வைத்த தூத்துக்குடி பெண்.. மொத்தமாக போச்சு

Tuticorin
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அடகு வைத்த தங்க நகைகளை மறு அடகு வைப்பது என்பது நமது ஊர்களில் தற்போது அதிகமாக நடக்கிறது. சிலருக்கு வங்கிகளில் தரும் பணத்தைவிட கூடுதல் பணம் தேவைப்படும்.. அப்படிப்பட்ட சூழலில் தனியார் அடகு கடைகளில் போய் அடகு வைக்கிறார்கள். அப்படித்தான் தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜெயராணி என்பவர், வீடு வாங்குவதற்காக தனது நகைகளை வங்கியில் அடமானம் வைத்து இருந்தாா். அவருக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. அதற்காக தனியாரில் மறு அடகு வைத்த நிலையில், அந்த நகையை மோசடி செய்துள்ளாராம் தனியார் நிதி நிறுவன பெண் உரிமையாளர்.. நடந்தது பற்றி பார்ப்போம்.

அடகு வைத்த நகையை மறு அடகு வைத்தால் அதிக பணம் தருவதாக சில தனியார் நிதி நிறுவனங்கள் ஆசை வார்த்தை காட்டுகின்றன.இதனால் அந்த வலையில் சிக்கும் சிலர் அடிமாட்டு விலைக்கு தங்க நகைகளை பறிகொடுக்கிறார்கள். சில அதிக பணம் வேண்டுமே என்று நம்பகத்தன்மை இல்லாத இடங்களில் அடகு வைத்து நகைகளை பறிகொடுத்து ஏமாறுகிறார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் சம்பவம் நடந்துள்ளது.

An unforgettable twist for a Tuticorin woman who re-pawned her gold jewellery privately

தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்தவர் ஜியோ என்பவர் கப்பலில் ஊழியராக பணியாற்றுகிறார். இவருடைய மனைவி ஜெயராணி என்ற ஜெயா என்பவருக்கு 34 வயது ஆகிறது. ஜெயராணி, வீடு வாங்குவதற்காக தனது நகைகளை ஒரு பெரிய வங்கியில் அடமானம் வைத்து இருந்தாா். இதனிடையே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ சிகிச்சைக்கு அவருக்கு கூடுதலாக பணம் தேவைப்பட்டது.

கரூரில் கையும் களவுமாக சிக்கிய சேலம் பூங்கொடி.. கையில் தங்க காசு.. ஆனந்த் கொடுத்த அல்வாதான் ஹைலைட்
கரூரில் கையும் களவுமாக சிக்கிய சேலம் பூங்கொடி.. கையில் தங்க காசு.. ஆனந்த் கொடுத்த அல்வாதான் ஹைலைட்

இதை அறிந்த தனியார் நிதிநிறுவன உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த மெசிங்டன் மனைவி ஜீவா ஹெர்மனா, சங்கரவேல் மகன் மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் ஜெயராணியிடம் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் தொகைக்கு மறுஅடமானம் வைத்து தருவதாக கூறியிருக்கிறார்களாம்.
இதையடுத்து ஜெயராணி, வங்கியில் இருந்த 135 பவுன் தங்க நகைகளை மீட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் ரூ.53 லட்சத்து 42 ஆயிரத்துக்கு மறு அடமானம் வைத்ததாக சொல்லப்படுகிறது. சில மாதங்கள் கடந்த பின்னர் ஜெயராணி தனது நகைகளை திருப்புவதற்காக மொத்தம் ரூ.43 லட்சத்து 41 ஆயிரம் கொடுத்தாராம்.

ஆனால் மொத்த பணத்தையும் வட்டியுடன் செலுத்தினால் மட்டுமே நகையை மீட்க முடியும் என்று தெரிவித்தார்களாம். இதனால் மீதி பணத்தையும் தயார் செய்த பிறகு நகையை ஜெயராணி கேட்டிருக்கிறார். ஆனால் ஜீவா ஹெர்மனா, மகேசுவரன் ஆகியோர் நகையை தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பெங்களூர் அமராவதிக்கு 4000 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் வாங்க ஆசை.. ஒரு கோடி காலி.. எப்படி?
பெங்களூர் அமராவதிக்கு 4000 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் வாங்க ஆசை.. ஒரு கோடி காலி.. எப்படி?

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராணி அடகு வைத்த தனது நகைகளை மீட்டு தரக்கோரி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஈடுபட்டதாக ஜீவா ஹெர்மனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேசுவரனை தேடி வருகிறார்கள். 135 பவுன் தங்க நகை மோசடி செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
English summary
How did Jayarani, a Tuticorin woman, get cheated by having her gold jewelry re-pawned privately for more money?
Read Entire Article