ARTICLE AD BOX
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகின்ற மார்ச்.24 அன்று ஒடிசா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கின்றார். இந்த பயணத்தின்போது நயாகாரிலுள்ள பாரதிய பிஷ்வபாசு சபர் சமாஜின் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராய்பூரிலிருந்து ஒடிசா தலைநகர் புவனேசுவரத்துக்கு மார்ச்.24 வருகை தரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலமாக நயாகாருக்கு பயணம் மேற்கொள்கின்றார். பின்னர், அவர் கண்டிலோ நிலாமாதா கோயிலுக்கு செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஓராண்டுக்கும் மேலாக போராட்டம்... விவசாயிகளின் கூடாரங்களை அகற்றிய காவல் துறை!
இதுகுறித்து வெளியான அறிக்கையில், நிகழ்ச்சிகள் முடிந்து அவர் அன்று மாலை புவனேசுவரத்துக்கு திரும்பி அங்குள்ள ராஜ் பவனில் இரவு தங்கவுள்ளார் என்றும் பின்னர் மார்ச்.25 காலை அங்கிருந்து புது தில்லிக்கு பயணிப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவரின் பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து குருதா, நயாகார் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் மனோஜ் அஹுஜாவுடன் இன்று (மார்ச் 19) காணொலி வழியாக கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.