ARTICLE AD BOX
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்ட அனைத்து பாஜக தொண்டர்களையும் ஜாமீனில் வெளியே கொண்டு வர கட்சி நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கடந்த வாரம் தெரிவித்தனர். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமைக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு சென்னை காவல் துறை அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், பனையூர் வீட்டில் இருந்து போராட்டத்துக்கு தனது ஆதரவாளர்களோடு வந்த மாநில தலைவர் அண்ணாமலை அக்கரை அருகே கைது செய்யப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார். இதேபோல அந்தக் கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டைவிட்டு வெளியே வரும்போதே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று மாலை விடுவிக்கப்பட்டனர். அதன்படி, சென்னை முழுவதும் நீலாங்கரை, தரமணி, எழும்பூர், விருகம்பாக்கம், கோட்டை உள்ளிட்ட இடங்களில் காவல் துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சோ்ந்த 242 பெண்கள் உள்பட 1,080 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அண்ணாமலை விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்; பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாரயம், மணல் கடத்தல் குற்றவாளிகளை தமிழக அரசு ராஜமரியாதையுடன் நடத்துகிறது. ஆனால், ஊழலை தட்டிக் கேட்பவர்களை சித்திரவதை செய்கிறது. காவல் துறையினர் எங்களிடம் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை இனி தீவிரப்படுத்த போகிறோம். இனி எந்தவித முன்னறிவுப்புமின்றி, காவல் துறையிடம் அனுமதி பெறாமல் தான் பாஜக போராட்டங்களை நடத்தும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் படங்களை வைப்போம் என்று கூறினார்.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணி மற்றும் அதன் நிர்வாகிகள் டாஸ்மாக் அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டினர். பல இடங்களில் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் ஜாமீனில் வெளியே கொண்டு வர பாஜக நடவடிக்கை எடுக்கும். வருங்காலங்களில் அதிக போராட்டங்கள் பாஜக முன்னெடுக்க வேண்டும். கைய நடவடிக்கைக்கு யாரும் அஞ்ச கூடாது. சிறப்பான போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் தனது வாழ்த்துக்களை குரல் பதிவு மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்தி உள்ளார்.
The post 1000 கோடி டாஸ்மாக் ஊழல் போராட்டம்… கைதுக்கு யாரும் அஞ்ச வேண்டாம்…! அண்ணாமலை பரபரப்பு ஆடியோ…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.