ARTICLE AD BOX
கடல் தேவதை மீன் (Pomacanthidae) என்பது கிளி வடிவ வகுப்பைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்குப் பசிபிக் பெருங்கடல் ஆகிய கடல்களின் ஆழம் குறைந்த பவளப்பாறைத் திட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன. இக்குடும்பத்தில் 7 பேரினங்களில் ஏறத்தாழ 86 இனங்கள் உள்ளன. ஒளிரும் நிறங்களையும், பக்கவாட்டில் அழுத்தப்பட்டது போன்றதும் உயரமானதுமான உடலமைப்பையும் கொண்ட கடற்தேவதை மீன்கள் பவளப்பாறைப் பகுதிகளில் வாழும் எடுப்பான தோற்றம் கொண்ட உயிரினங்கள் ஆகும். முதன்முதலாக 1772-ம் ஆண்டில் டச்சு இயற்கை ஆர்வலர் பீட்டர் போடெர்ட்டால் இந்த தேவதை மீன் இனம் முதலில் விவரிக்கப்பட்டது. பின்னர் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் விலங்கியலில் முக்கியமானது.
இம்மீன்களில் பைகோபிளிட்டிசு டைகாந்தசு சிற்றின மீன்களாக, அரச தேவதை மீன் அல்லது ராயல் தேவதை மீன் (Royal Angel Fish) எனப்படுகிறது.
வெப்பமண்டல இந்தோ - பசிபிக் பெருங்கடல்களில் இருக்கும் அரச தேவதை மீனின் உடல் மிதமான நீளத்துடன் தட்டையாகக் காணப்படும்.
கண்குழிக்கு முன் உள்ள எலும்பு குவிந்தது வலுவற்று காணப்படும். ப்ரீபெர்கலில் ஒரு கோணத்தில் 1 முக்கிய முதுகெலும்பு உள்ளது. இன்டர்பெர்கிளின் வென்ட்ரல் விளிம்பு மென்மையானது. முனையமாக இருக்கும் வாயுடன் கண்கள் மிதமாக சிறியதாக இருக்கும். வாயின் அதிகபட்ச நீளம் 25.0 செ.மீ. ஆகும். இவை மொத்தம் 14 முதுகெலும்புகள் மற்றும் 17 முதல் 19 மென்மையான முதுகெலும்புக் கதிர்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 3 குத முதுகெலும்புகள் மற்றும் 17 முதல் 19 குத மென்மையான கதிர்களைக் கொண்டுள்ளன. இவை 16 முதல் 17 மார்புப் பகுதி துடுப்பு கதிர்களையுடையது. இவற்றின் வால் துடுப்பு வட்டமானது.
வாழிடச் சூழலைப் பொறுத்து நிற மாறுபாடுகள், குறிப்பாக, இந்தியப் பெருங்கடல், செங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் இனங்களில் காணப்படுகிறது. இருப்பினும், பொதுவான குறுகிய நீல - வெள்ளை மற்றும் ஆரஞ்சு கோடுகளுடன் பின்னோக்கிய விளிம்புடன் கூடிய உடலைக் கொண்டுள்ளன. முதுகுப்புற துடுப்பின் பின்புறப் பகுதி கருப்பு அல்லது நீல நிறத்தில் நெருக்கமாக அமைந்த நீல புள்ளிகளுடன் உள்ளது. குத துடுப்பின் பின்புறப் பகுதியில் மஞ்சள் மற்றும் நீல நிற பட்டைகள் அடுத்தடுத்து உடல் பட்டைகளுக்கு ஈடாக அமைந்துள்ளன. வால் துடுப்பு மஞ்சள் நிறமுடையது. வண்ணமயமான மீன் குஞ்சுகளின் மென்மையான முதுகுபுற துடுப்பின் அடிப்பகுதியில் பெரிய கருமையான புள்ளி காணப்படும். இந்த அரசத் தேவதை மீன்கள் 15 ஆண்டுகள் வரை வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பைகோப்லைட்ஸ் டயகாந்தஸ் 0 முதல் 80 மீ வரையிலான ஆழத்தில், பவள வளமான பகுதிகளான தடாகங்கள், பாறைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது.
மேலும் தண்ணீருக்குள் காணப்படும் குகைகளுக்கு அருகிலும் காணப்படுகின்றன. இது ஊன் உண்ணி இனமாகும். பாறைகள் மற்றும் தண்ணீருக்கு அடியில் குகைகள் முழுவதும் காணப்படும்.பஞ்சுயிரிகள் மற்றும் டூனிகேட்டுகளை உணவாக உண்ணுகின்றன. இவை ஓரிடத்திலிருந்து பிரிதொரு இடத்திற்கு இடம் பெயர்வதில்லை. மேலும் தனியாக, இணையாகவோ அல்லது கூட்டமாகவோ, இதனுடைய இளம் உயிரிகள் பாறை விரிசல் மற்றும் பள்ளங்களில் பாதுகாப்பாகத் தங்குகின்றன.
அரச தேவதை மீன்கள் மனிதர்களுக்கு எவ்விதப் பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை. இவை மீன்வளத் தொழிலில் சிறிய வணிகப் பயன்பாட்டினைக் கொண்டுள்ளது. இம்மீன்கள் பஞ்சுகளை உண்டு, பவளப்பாறைகளை உணவாக உண்பதைத் தவிர்ப்பதால், மீன்வள ஆர்வலர்களால், இம்மீன்கள் மீன் காட்சியகத்தில் வளர்ப்பதற்கு உகந்த பாதுகாப்பான மீனாக மதிப்பிடப்படுகிறது.
மீன் காட்சித் தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்களுக்குச் சரியான வாழிடச் சூழலை வழங்குவதன் மூலம் செயற்கை வாழ்விடத்தில் வளர்க்க இம்மீனைத் தயார்படுத்தலாம். மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் தேவதை மீன்களுக்கு, உயிர் உணவு, உறைபதன உணவு, அல்லது உலர் உணவினை வழங்கி அதன் உணவுத் தேவையினை பூர்த்தி செய்யலாம். இம்மீனைத் தொட்டிகளில் வளர்க்கும் நிலையில், பெரிய கடல் தேவதை மீன், கிளாத்தி மீன், கோளமீன்கள், வன் தாக்க மீன் இனங்களான கோமாளி மீன் மற்றும் முள்வால் வகை மீன்களை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தேவதை மீன்கள் முட்டையிடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. சினை விடுதல் பொதுவாக இரவில் நடக்கும். முட்டைகள் மற்றும் விந்தணுக்கள் நீரின் மேல்பகுதியில் இடுவதற்கு முன்பு இம்மீன்கள் சுழல் நடனத்தில் ஈடுபடுகின்றன.