ARTICLE AD BOX
Reason Why Harris Jayaraj Rejected Vijay Films : தமிழ் திரையுலகின் டாப் நடிகரான விஜய் படங்களுக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து கொடுத்திருக்கிறார். ஆனால், அவரது 10 படங்களை ஹாரீஸ் ரிஜெக்ட் செய்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?
கோலிவுட் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர், விஜய். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை தனது நடிப்பாலும் நடனத்தாலும் பாடலாலும் என்டெர்டெயின் செய்த இவர், தனது கடைசி படத்தை முடித்து விட்டு திரையுலகை விட்டு விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருக்கும் விஜய், சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் இப்போது வரை தன்னுடைய 200% உழைப்பை தான் நடிக்கும் படங்களுக்காக கொடுப்பார். இந்த நிலையில், அவரது படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறி, ஹாரிஸ் ஜெயராஜ் 10 படங்களை ரிஜெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?
கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ், சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், தான் விஜய் நடித்த 10 படங்களை ரிஜெக்ட் செய்ததாக கூறியிருக்கிறார். விஜய்யின் நண்பன் படத்திற்கு இசையமைக்கும் முன், அவரிடம் விஜய்யின் படத்திற்கு இசையமைக்க வேண்டுமென, 10 படங்கள் கிட்ட வந்ததாகவும், அப்போது அவற்றை வேண்டாமென தான் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
தான் எப்போதும் வேலையில் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஆள், என்று கூறும் ஹாரிஸ் ஜெயராஜ், பல படங்களை ஒரே நேரத்தில் ஒப்புக்கொண்டால் அதனால் பிரஷர் அதிகமாகிவிடும் என்பதால் அந்த படங்களை ரிஜெக்ட் செய்ததாக தெரிவித்துள்ளார்.
விஜய்-ஹாரிஸ் கூட்டணியில் உருவான படங்கள்..
ஹாரிஸ் ஜெயராஜ், முதன்முதில் விஜய்யுடன் கைக்கோர்த்த திரைப்படம் நண்பன். இந்த படத்தில் வந்த ஹஸ்கு ஹஸ்கு, நல்ல நண்பன் வேண்டும் என்று, ஹார்டிலே பேட்டரி, எந்தன் கண் முன்னே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் அடித்தது.
நண்பன் படத்திற்கு பிறகு, ஹாரிஸும் விஜய்யும் இணைந்த படம் துப்பாக்கி. முதல் படத்தில் பெப்பி, க்ளாசிக்கல் என அனைத்து இசையும் கலந்தடிக்க, இந்த படத்திலும் பல தரப்பட்ட பின்னணி இசைகளும் பாடல்களும் கலந்த கலவையாக இருந்தது. இருப்பினும் அனைத்து பாடல்களும் மெகா ஹிட் அடித்தன. குறிப்பாக கூகுள் கூகுள் பாடல் பலருக்கும் ஃபேவரெட் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?
மேலும் படிக்க | விஜய்யின் வாழ்வில் மிக சிறப்பான நாள் இன்று... ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ