ARTICLE AD BOX
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் கீழ் செயல்படும் அங்கான்வாடி மையங்களில் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியாகியுள்ளது.
காலிபணியிடங்கள் : 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 மினி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
கல்வித்தகுதி: அங்கன்வாடி மற்றும் மின் அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதற்கான நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அங்கன்வடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்களின் வயது வரம்பு 20 முதல் 40 வயரை இருக்கலாம். பட்டியல், பழங்குடியின வகுப்பினர், ஆதாரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு வயது வரம்பில் கூடுதலாக 5 வருடங்கள் தளர்வு உண்டு.
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அங்கன்வாடி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். விரைவில் மாவட்ட வாரியகா காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வெளியானதும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
The post 10-ம் வகுப்பு போதும்.. அங்கன்வாடியில் 7,783 காலிப்பணியிடங்கள்..!! நல்ல சான்ஸ்.. விட்றாதீங்க appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.