1 கிலோ 4,50,000 ரூபாயாம்! வீட்டில் குங்குமப்பூ வளர்ப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?

18 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

1 கிலோ 4,50,000 ரூபாயாம்! வீட்டில் குங்குமப்பூ வளர்ப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?

News

"சிவப்பு தங்கம்" என்று அழைக்கப்படும் குங்குமப்பூ தான் விலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மசாலா பொருட்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இனிப்புகள், பிரியாணி என அனைத்திலும் இவை சேர்க்கப்படுகிறது. குறிப்பாக சருமத்திற்கு தேவைப்படும் கிரீம் தயாரிப்பில் குங்குமப்பூ அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே காஷ்மீரில் தான் குங்குமப்பூ விளைவதற்கு ஏதுவான சுற்றுச்சூழல் உள்ளது.

ஆனால் எளிய உட்புற விவசாய முறைகளைப் பயன்படுத்தி வீட்டிலும் குங்குமப்பூ வளர்க்கலாம். அப்படி வீட்டில் குங்குமப்பூ வளர்த்து தற்போது லட்சங்களில் சம்பாதிக்கும் பலர் நம் நாட்டில் உள்ளனர். இந்தப் பதிவில் குங்குமப்பூ விவசாயம் செய்ய என்னென்ன தேவை? என்பது குறித்து பார்ப்போம்.

1 கிலோ 4,50,000 ரூபாயாம்! வீட்டில் குங்குமப்பூ வளர்ப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?

அறை தேவைகள்: வீட்டிற்குள் குங்குமப்பூ வளர்ப்பதற்கு உங்கள் அறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஒரு 20 * 20 அடி அறை இருந்தால் போதுமானது. குங்குமப்பூ விதைகளை வாங்கிய பிறகு அது முளைக்கும் வரை வெப்பநிலை 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். அதன் பிறகு பூக்கள் பூக்கும் போது 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்க வேண்டும். இந்த மொத்த விளைவிக்கும் காலத்தில் ஈரப்பதம் 70 முதல் 80 சதவீதம் இருக்க வேண்டும். வெப்பநிலையை சீராக வைத்திருக்க PUF பேனல்கள் அல்லது தெர்மோகோல் தாள்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

உட்புற குங்குமப்பூ பண்ணை அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும்?: குங்குமப்பூ வளர்ப்பதற்கு தோராயமாக 40 தெர்மாகோல் ஷீட்டுகள் வரை தேவைப்படலாம். ஒவ்வொரு தெர்மாகோல் ஷீட்டின் விலையும் ரூ.150. அப்படியானால் 40-க்கும் சேர்த்து ரூ. 42,000 செலவாகலாம்.

800 சதுர அடியில் PUF பேனல்கள் தேவை. PUF பேனலின் 1 சதுர அடி விலை 115 ரூபாய். அப்படியானால் 800 சதுர அடிக்கு ரூ. 92,000 செலவாகலாம். இது தவிர 2 ஏர் கண்டிஷனர்கள் தேவை. ஒன்றின் விலை ரூ. 35,000 என்று வைத்துக் கொண்டாலும்.. 2 ஏர் கண்டிஷனர்கள் வாங்க 70,000 ரூபாய் தேவைப்படும். ஈரப்பதத்தை தக்க வைக்க 2 ஹுமிடிஃபயர் வாங்கியாக வேண்டும். இதன் விலை ரூ. 15,000.

இது தவிர சூரிய ஒளி இல்லாமல் பயன்படுத்த ஸ்பெக்ட்ரம் லைட்டுகள் தேவைப்படும். நான்கு லைட்டுகள் போதுமானது. ஒன்றின் விலை ரூ. 10,000. 4 லைட்டுகளுக்கு சேர்த்து 40,000 செலவாகலாம். இதன் மூலம் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு தோராயமாக ரூ. 2,74,000-ஆக இருக்கும். நீங்கள் விளைவிக்கும் இடம் மற்றும் இதைவிட குறைவாக செய்ய நினைத்தால் அதை பொருத்தும் நீங்கள் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே.

இதைத் தவிர ஹைட்ரோபோனிக் தட்டுகள், வாட்டர் டேங்க், வாட்டர் பம்ப் மற்றும் குங்குமப்பூ வளர்ப்புக்கு தேவைப்படும் நியூட்ரியன்ட்களும் முக்கியம். இதையெல்லாம் சேர்த்து தோராயமாக 83,000 ரூபாய் செலவு செய்ய வேண்டி வரலாம். அதன் பிறகு 20*20 ரூமில் தோராயமாக 40,000 குங்குமப்பூ பல்புகளை வளர்க்க முடியும். இதன் மூலம் வருடத்திற்கு 600 இருந்து 800 கிராம் வரையிலான உலர்ந்த குங்குமப்பூ கிடைக்கும்.

எப்படி குங்குமப்பூ வளர்ப்பது?: முதலில் பிளாஸ்டிக் ரேக்குகளில் குங்குமப்பூ கிழங்குகளை அடுக்கி வைக்க வேண்டும். கிழங்கு முளைக்க ஆரம்பிக்க 90 முதல் 100 நாள் வரை டைம் எடுக்கும். அதுவரை அறையை இருட்டாக வைத்திருக்க வேண்டும். 100 நாட்கள் கழித்து பூ பூக்க ஆரம்பிக்கும். அப்போது ஸ்பெக்ட்ரம் லைட்டுகளை ஆனில் வைக்க வேண்டும். அக்டோபர் முதல் நவம்பர் மாதங்கள் குங்குமப்பூ உற்பத்திக்கு ஏற்ற காலம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த மாதங்களில் பூக்கள் பூக்க தொடங்கும். அந்த பூவில் இருக்கும் மகரந்தங்களை பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை முடிந்ததும் கிழங்குகளை மண்ணில் நட்டு வைக்கலாம்.

Also Read
இங்கெல்லாம் வீடு கட்டவே கூடாது.. உங்க வீடு எங்க இருக்கு..???
இங்கெல்லாம் வீடு கட்டவே கூடாது.. உங்க வீடு எங்க இருக்கு..???

பிற செலவுகள்: மாதம்மாதம் கரண்ட் பில் செலவு 24,000 ரூபாய், தண்ணீர் செலவு 1000 ரூபாய், வேலை ஆட்களின் வருடாந்திர சம்பளம் 1,20,000 ரூபாய். ஆக மொத்தம் மாதத்துக்கு 25,000 ரூபாய் வரை செலவாகும். வருடத்திற்கு ரூ.3 லட்சம் ரூபாய் வரை ஆகலாம்.

லாபம்: குங்குமப்பூ விளைவிக்க செய்ய வேண்டிய செலவுகளை எல்லாம் வைத்துப் பார்த்தால் தோராயமாக ரூ. 8,37,600 வரை செலவாகும். அதேபோல வருடத்திற்கான செலவு ரூ. 3 லட்சம் என்று பார்த்தோம். இவற்றையெல்லாம் செய்து குங்குமப்பூ வளைவித்தால் 600 முதல் 800 கிராம் குங்குமப்பூ கிடைக்கும். ஒரு கிலோ குங்குமப்பூ 4,50,000 வரை விலை போகிறது. அப்படியானால் 600 முதல் 800 கிராமை வைத்து ரூ. 2,70,000 முதல் ரூ. 3,60,000 வரை விற்பனை செய்ய முடியும். இதிலிருந்து தோராயமாக ரூ. 30,000 முதல் ரூ. 60,000 வரை லாபம் கிடைக்கும்.

குங்குமப்பூ விளைவித்த பிறகு கிழங்குகளை மண்ணில் நட்டு வைத்தால் அவை பெருகி ஒரு கிழங்குக்கு இன்னொரு கிழங்காக கிடைக்கும். இப்படி உற்பத்தியை அதிகரித்தால் மறுவருடங்களில் உங்களுடைய வருமானம் ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 9 லட்சமாக உயரும்.

Also Read
வேலை கிடைச்சிடுச்சா? கொண்டாட்டம் வேணாம்பா! அமேசான் பணி நீக்கம் குறித்து டாக்டர் வேலுமணி கருத்து!
வேலை கிடைச்சிடுச்சா? கொண்டாட்டம் வேணாம்பா! அமேசான் பணி நீக்கம் குறித்து டாக்டர் வேலுமணி கருத்து!

என்னதான் குங்குமப்பூ விளைவிக்கும் டெக்னிக் குறித்து தெரிந்து கொண்டாலும்.. அதை சரிவர கற்றுத் தருவதற்கு ஒரு பயிற்சி வழங்குனர் தேவை. இன்றெல்லாம் சுயதொழில் முனைவோருக்காக பல ஊர்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒரு முறை குங்குமப்பூ விவசாயம் செய்வது குறித்து பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது இதற்கு முன்னர் வெற்றிகரமாக குங்குமப்பூ விளைவித்து சந்தையில் விற்பனை செய்யும் யாரையாவது சந்தித்து அவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

எப்படி குங்குமபூ விவசாயத்தில் வெற்றி கண்டு லாபம் பார்த்து வரும் கூட்டம் இருக்கிறதோ.. அதேபோல இது போன்ற விவசாய முறைகளை கையில் எடுத்து நஷ்டத்தை சந்தித்தவர்களும் உள்ளனர். கையில் எடுக்கும் தொழில் லாபம் தருமா? நஷ்டம் தருமா? என்பதை முன்னரே கூறி விட முடியாது. எனவே தக்க பயிற்சி பெற்று ஆரம்பிப்பது தொழில் தொடங்குபவர்களுக்கு அதேசமயம் புது விஷயங்களை முயற்சி செய்பவர்களுக்கும் நன்மை பயக்கும்.

வீட்டிலேயே குங்குமப்பூ வளர்ப்பதற்கு எந்தெந்த விஷயங்கள் தேவை? எவ்வளவு செலவாகும்? என்பதற்காகத்தான் இந்த பதிவு. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு தொழில் தொடங்க வேண்டுமானாலும் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பெயரில் தொடங்குங்கள்.

Read Entire Article