ஐபிஎல் 2025: அம்பானி போடும் மெகா திட்டம்.. கல்லா கட்டப்போகும்..!!

1 day ago
ARTICLE AD BOX
  செய்திகள்

ஐபிஎல் 2025: அம்பானி போடும் மெகா திட்டம்.. கல்லா கட்டப்போகும்..!!

News

ஐபிஎல் 2025 சீசன் இன்று அமர்களமாக தொடங்கியது. இந்திய ரசிகர்களுக்கு ஐபிஎல் என்றாலே உற்சாகம், உத்வேகம் ஏற்பட்டு விடும். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ஐபில் போட்டிகளுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி தொடர் விளம்பரங்களிலிந்து கிடைக்கும் வருவாயும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வாயிலான தொலைக்காட்சி மற்றும் விளம்பர வருவாய் தோராயமாக ரூ.4,000 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதனை காட்டிலும் கூடுதலாக ரூ500 கோடி வருவாய் ஈட்ட ஜியோஸ்டார் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டார் இந்தியா மற்றும் வியாகாம் 18 ஆகியவற்றின் இணைப்புக்கு பிறகு நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டி என்பதால், மை சர்க்கிள், பிர்லா ஓபஸ்,எஸ்பிஐ,போன்பே,மியூச்சுவல் பண்ட்ஸ் சாஹி ஹை, பிரிட்டானியா 50-50, ஹேயர்,வோல்டாஸ், எம்ஆர்எஃப்,அமேசான் பிரைம், தம்ஸ் அப், கூகுள் சர்ச்,ஜாகர் பாத் +லைட்,ஆலன் சோலி, ஜிபே,கென்ட் குஹல் ஃபேன்ஸ், ட்ரீம்11, காம்பா,டிவிஎஸ்,ஏசியன் பெயிண்ட்ஸ்,மாருதி,காரட்லேன் மற்றும் அமுல் உள்ளிட்ட தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஸ்பான்சர்களுடன் ஜியோ ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது.

 அம்பானி போடும் மெகா திட்டம்.. கல்லா கட்டப்போகும்..!!

ஒட்டு மொத்தமாக இந்த நெட்வொர்க் பெரிய பிராண்டுகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட 1,100 ஸ்பான்சர்களை இணைத்துள்ளது. இந்த ஆண்டு ஜியோ ஸ்டார் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை குறிவைத்துள்ளது. அவற்றில் பல பொதுவாக கூகுள் மற்றும் மெட்டாவில் விளம்பரப்படுத்துகின்றன.

டிவிக்கான ஐபிஎல் பேக்கேஜ் ரூ.40 கோடி முதல் ரூ.240 கோடி வரை இருக்கும். அதேசமயம் பிராந்திய கூட்டாளிகளுக்கு பேக்கேஜ் ரூ.16 கோடி வரை மட்டுமே. இணைக்கப்பட்ட டிவிக்கு 10 வினாடிக்கு ரூ.8.5 லட்சமும், மொபைலில் ஒரு இம்ப்ரெஷனுக்கு ரூ.250 செலவாகும்.

ஐபிஎல் சீசனில் ஜியோஹாட் ஸ்டாருக்கு நேரடி பதிவுகள் மற்றும் தொலைத்தொடர்பு கூட்டாண்மைகள் மூலம் 4 கோடி கட்டண சந்தாதாரர்களை சேர்க்க ஜியோஸ்டார் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதன் தளத்தை 10 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதியன்று ஜியோ சினிமாவுடன் ஹாட்ஸ்டார் இணைக்கப்பட்டது. அப்போது சந்தாதாரர்களின் எண்ணிக்கை 5 கோடியாக இருந்தது.

தற்போது இந்த ஸ்ட்ரீமிங் தளம் தற்போது 6.2 கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ளது. ஜியோஸ்டார் விளையாட்டு துறையின் தலைமை நிர்வாகி சஞ்சோக் குப்தா கூறுகையில், ஐபிஎல் 2025 சீசன் விளம்பரங்களில் மட்டுமல்ல, சந்தாக்களிலும் மிகப்பெரிய பதிப்பாக இருக்கும். லீனியர் டிவி மற்றும் கனெக்டட் டிவி இரண்டிலும் பெரிய திரை விளம்பரப் பட்டியல் விற்று தீர்ந்து விற்றது என்று தெரிவித்தார்.

Read Entire Article