இப்படியும் கூட கட்டிடத்தை கட்ட முடியுமா என பார்ப்பவர்கள் வியந்து போகும் அளவிற்கு அழகான வடிவமைப்புகள் மற்றும் வரலாற்று பின்னணிகள் கொண்ட உலகெங்கிலும் உள்ள 10 அற்புதமான கட்டிடக்கலைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தாஜ்மஹால், இந்தியா
நுணுக்கமான சிற்பங்கள் மற்றும் பிரம்மாண்டமான கட்டிடக்கடையுடன் கூடிய காதலின் அற்புத சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய பளிங்கினால் ஆன இந்த தாஜ்மஹால் ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாக உள்ளது. இது உலக அதிசயங்களில் ஒன்றாகும்.
சிட்னி, ஓபரா ஹவுஸ்
ஆஸ்திரேலியாவில் சிலிர்ப்பூட்டக்கூடிய துறைமுகக் காட்சிகள் மற்றும் பாய்மரம் போன்ற வடிவமைப்புடன் கூடிய கட்டிடக்கலைக்கு தலைசிறந்த படைப்பான ஓபரா ஹவுஸ் சிட்னி நகரில் ஓபரா ஹவுஸ் அமைந்துள்ளது.
கொலோசியம், இத்தாலி
ரோமின் மகத்துவத்தையும், கிளாடியேட்டர்களின் வளமான வரலாற்றை வெளிப்படுத்தும் விதமான ஒரு பழங்கால ஆம்பிதியேட்டரான கொலாசியத்தை இத்தாலியின் ஒரு அடையாளமாக கருதலாம்.
சீனப் பெருஞ்சுவர்
13000 மைல்களுக்கு மேல் நீளமான சீனப் பெருஞ்சுவர், ஒரு பழங்கால கோட்டையான சிறப்பு வரலாற்று சின்னமாகும். இது வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடம் ஆகும்.

புர்ஜ் கலீஃபா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
நவீன கட்டிடக்கலையின் உச்சத்தை பிரதிபலிக்கும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு கௌரவமாக உள்ளது.
மச்சுபிச்சு
பிரமிக்க வைக்கும் மலை நிலப்பரப்புகளில் அமைந்திருக்கும் இன்கான் கோட்டையான மச்சுபிச்சு அதன் ரம்மியமான அழகில் பார்வையாளர்களை கவரும் ஒன்றாக அமைந்துள்ளது.
பெட்ரோ, ஜோர்டான்
பண்டைய கால கைவினை திறனை வெளிப்படுத்தும் பாறைகளால் செதுக்கப்பட்ட கோயில்களுக்கு பிரபலமான பெட்ரோ, ஒரு அழகான ரம்மியமிக்க ரோஜா நகரமாகும். இங்கு சென்று பண்டை கால சிற்பங்கள் மற்றும் கைவினைத் திறன்கள் கண்டு வியக்கும் படியாக உள்ளது.
ஈபிள் கோபுரம்
பிரான்ஸ் பாரிசில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமான இடமான ஈபில் கோபுரம், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இரும்பு லேட்டிஸ் கோபுரம் ஆகும். இது உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது.
சாக்ரடாஃபேமிலியா, ஸ்பெயின்
அன்டோனி கெளடி வடிவமைத்த கோதிக் மற்றும் ஆர்ட் நோவியா பாணிகளை கலந்து அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள சாக்ரடாஃபேமிலியோ, ஸ்பெயினில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும். இது பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
ஹாகியா சோபியா, துருக்கி
இஸ்தான்புல்லில் உள்ள குவிமாடங்கள் மற்றும் மொசைக் சிற்பங்களின் அழகை காண்பிக்கும் ஒரு பிரமிக்க வைக்கும் பைசண்டைன், அதிசயமான ஹாகியா சோபியாவை பார்வையிட சிறந்த இடம் ஆகும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet