ARTICLE AD BOX
Published : 04 Mar 2025 08:01 AM
Last Updated : 04 Mar 2025 08:01 AM
ரோஹித்தை விமர்சித்தவருக்கு பிசிசிஐ செயலாளர் பதிலடி

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஷாமா முகமது தனது எக்ஸ் வலைதள பதிவில், “ரோஹித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் எடையைக் குறைக்க வேண்டும். இந்திய கேப்டன்களில் தாக்கத்தை ஏற்படுத்தாத கேப்டன் இவர்தான்” என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் அந்த பதிவை ஷாமா நீக்கினார். இந்நிலையில் ரோஹித் சர்மாவை விமர்சித்த ஷாமாவுக்கு பிசிசிஐ-யின் செயலாளர் தேவஜித் சைக்கியா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, “முக்கியமான ஐசிசி போட்டிக்கு மத்தியில் இந்திய அணி இருக்கும்போது ஒரு பொறுப்பான நபர் இதுபோன்ற அற்பமான கருத்தை தெரிவிப்பது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. இது ஒரு தனிநபரையோ அல்லது குழுவையோ மனச்சோர்வடையச் செய்யலாம்.
அனைத்து வீரர்களும் தங்கள் அதிகபட்ச திறனுடன் செயல்படுகிறார்கள், இதன் முடிவுகள் அனைவருக்கும் தெரியும். தேச நலனை விலையாகக் கொடுத்து தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தனிநபர்கள் தவிர்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- கேன்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இனியன்
- கொளத்தூரில் 4 மாதங்களை நிறைவு செய்த முதல்வர் படைப்பகம்: ரூ.60 லட்சத்தில் வாகன நிறுத்தம், உணவு அருந்துமிடம்
- அனைத்து திரையரங்குகளிலும் ஆய்வு செய்ய குழு: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தகவல்
- அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு - கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்