ARTICLE AD BOX
துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவரின் மறைவை ஒட்டி இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இது குறித்து பிசிசிஐ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
நேற்று மும்பை மாநில கிரிக்கெட் வீரரான பத்மாகர் ஷிவால்கர் மறைந்தார். அவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 589 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். மேலும். இந்திய அளவில் மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளராக இருந்தவர். அவர் சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்த அதே நேரத்தில் தான் பிஷன் சிங் பேடி போன்ற சுழற்பந்து ஜாம்பவான்கள் இந்திய அணிக்காக விளையாடி வந்தனர். அதனாலேயே பத்மாகர் ஷிவால்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனினும், அவர் கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கை கௌரவிக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு அவருக்கு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவர் நேற்று மும்பையில் தனது 84-வது வயதில் மறைந்தார். அவரது நினைவாகவே இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
IND vs AUS: யார் இந்த தன்வீர் சங்கா? இந்திய வம்சாவளி வீரரை இறக்கிய ஆஸ்திரேலியா.. என்ன திட்டம்?
சில நெட்டிசன்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாமா முகமது, ரோஹித் சர்மாவை விமர்சித்ததற்காக இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக தவறான சித்தரிப்பு ஒன்றையும் பரப்பி வருகின்றனர். அதில் உண்மை இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டிராவிஸ் ஹெட் முதலில் நிதானமாக ஆடினாலும் அதன் பின் அதிரடியாக ரன் சேர்த்தார். மற்றொரு துவக்க வீரரான கூப்பர் கானோலி ஒன்பது பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.
இந்திய அணி பிளேயிங் 11: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி