‘ராகுல் மீது எப்போதுமே ஒரு தேவையற்ற அழுத்தம் திணிக்கப்படுகிறது’ - அனில் கும்ப்ளே

6 hours ago
ARTICLE AD BOX

Published : 06 Mar 2025 01:33 PM
Last Updated : 06 Mar 2025 01:33 PM

‘ராகுல் மீது எப்போதுமே ஒரு தேவையற்ற அழுத்தம் திணிக்கப்படுகிறது’ - அனில் கும்ப்ளே

<?php // } ?>

கே.எல்.ராகுல் மீது தேவையற்ற அழுத்தம் செலுத்தப்படுகிறது என்று முன்னாள் இந்திய கேப்டன் கோலியால் புறமொதுக்கப்பட்ட முன்னாள் தலைமைப் பயிற்சியாளர், அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கே.எல்.ராகுல் ஆடிய இன்னிங்ஸ் அவருக்கு ‘நிறைய நம்பிக்கையை அளித்திருக்கும்’ என்கிறார் அனில் கும்ப்ளே. அக்சர் படேல் விக்கெட் விழுந்தவுடன் கே.எல்.ராகுல் களமிறங்கினார். 34 பந்துகளில் 42 ரன்களை அவர் அடித்ததோடு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவோடு முக்கியக் கூட்டணிகளை அமைத்தார். ஆனால், கவுதம் கம்பீர் - ரோஹித் சர்மா கூட்டணியின் விசித்திர கணக்கீடுகளில் ராகுல், ரிஷப் பண்ட்டை விட முக்கியமானவர், ஆனால் களமிறக்கும் போது அக்சர் படேலுக்கு அடுத்து இறங்குவார். இது என்ன லாஜிக்? கேள்வி கேட்பாரில்லை என்று நினைக்கும் போது அனில் கும்ப்ளே கேள்வி எழுப்புகிறார்:

“அக்சர் படேலுக்கு முன்பாக ராகுல் களமிறங்க வேண்டும். அக்சர் படேல், விராட் கோலியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்ததில் நல்ல வேலை செய்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் கே.எல்.ராகுல் அதே இடத்தில் இறங்கினாலும் அவரும் இதைச் செய்திருப்பார். அவர் 30 ரன்களை எடுத்தால் போதும் வெற்றி இலக்கைக் கடந்து விடலாம் என்பதை உறுதி செய்வார். இதை அவர் சீரான முறையில் செய்தும் வருகிறார்.

நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாய்ப்பு அவருக்கு நழுவிப்போனது. ஆனால் ராகுல் ஒரு கிளாஸ் வீரர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்னிங்ஸ் அவரிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.

அவர் மீது தேவையற்ற அழுத்தம் செலுத்தப்படுகிறது, நன்றாக ஆடினால் ஒன்றும் சொல்வதற்கில்லை, ஆனால் ஒரு இன்னிங்சில் தோல்வி அடைந்தாலும் உடனே உலகமே அவருக்கு எதிராக திரண்டு எழுகிறது. அவர் விக்கெட் கீப்பிங்கிலும் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிலும் தன் திறமையை எடுத்துக் காட்டியுள்ளார்” என்கிறார் அனில் கும்ப்ளே.

இதில் ஒரு சிக்கல் உள்ளது, அணியில் சில வீரர்களுக்கான லாபி கடுமையாக உள்ளது. இதில் ரோஹித், கோலி, கில், ராகுல், பாண்டியா, ஜடேஜா முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்களுக்கு காயம் ஏற்பட்டால்தான் அல்லது இவர்கள் ‘நான் விடுப்பில் செல்கிறேன்’ என்றால்தான் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு. மற்றபடி இவர்களது ஆட்டம், தோல்விகள், இவர்களது சொதப்பல்கள் எப்போதும் கேள்விக் கேட்கப் படுவதில்லை, காரணம் இவர்களெல்லாம் பிராண்ட், இந்திய அணியே ஒரு பிராண்ட் தான். ஐசிசி அப்படியாகத்தான் தன் தொடர்களை திட்டமிடுகிறது. இப்படியிருக்கையில் அணியில் இருக்கும் ராகுலுக்கு நெருக்கடி இருப்பதாகக் கவலைப்படும் அனில் கும்ப்ளே, நன்றாக ஆடியும் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சிலோ, வெளியிலோ அமர்ந்திருக்கும் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜெய்ஸ்வால், கருண் நாயர், சர்பராஸ் கான் உள்ளிட்டோருக்கு எப்படி இருக்கும்? இந்த மனநிலையையும் கொஞ்சம் அனில் கும்ப்ளே சிந்தித்துப் பார்த்து பேசினால் நன்றாக இருக்கும்.

அணியில் இருந்து கொண்டே பிரஷரை அனுபவிப்பது வேறு விதம். இது இயல்பானது. ஆனால் அணிக்குள் வருவதற்கே, பிறகு லெவனில் வருவதற்கே தங்களை ஒவ்வொரு விதத்திலும் நிரூபிக்க வேண்டிய பிரஷரில் இருந்து கொண்டு அப்படி நிரூபித்தாலும் அந்த நிரூபிப்பு, கடின உழைப்பு விரயமாவதையும் பற்றி யாரேனும் பேசுவார்களா? இந்திய அணிக்குள் நிலவும் ‘படிமுறை’ பற்றி யாரேனும் வாயைத் திறப்பார்களா? திறமையா வணிகமா என்ற விவாதம் எழுப்பப்படுமா? என்பதே கிரிக்கெட்டை நேசிக்கும் சுரணையுள்ள ரசிகர்களான நம் கேள்வி.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article