ARTICLE AD BOX
யாரு சாமி அவன்.. 50MP பெரிஸ்கோப்.. SONY லென்ஸ்.. OIS டெக்னாலஜி.. 60X ஜூமிங்.. 50W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்த போன் வரட்டும், அப்புறம் வேற போன் வாங்குறத பத்தி யோசிக்கலாம் என்று காத்திருக்கும்படியான பீச்சர்கள் மற்றும் டிசைனில் நத்திங் போன் 3ஏ சீரிஸ் (Nothing Phone 3a Series) வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, கேமரா பீச்சர்கள் உறுதியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்போது, டிசைன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி மூக்கில் விரல் வைக்க செய்துள்ளன. இந்த நத்திங் போன் 3ஏ சீரிஸ் எப்போது வெளியாகிறது? பீச்சர்கள் எப்படி? விலை எப்படி இருக்கும்? முழு விவரங்கள் இதோ.
இந்திய மார்கெட்டில் மார்ச் 4ஆம் தேதி நத்திங் போன் 3ஏ சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. பெரிஸ்கோப், ஓஐஎஸ், சோனி சென்சார் போன்ற பிரீமியம் கேமரா பீச்சர்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக வெளியாகின. அடுத்தடுத்த பீச்சர்களும் இப்போது மார்கெட்டில் கசிந்து வருகின்றன.

அதைத் தொடர்ந்து, டிசைன் விவரங்கள் வெளியாகி கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) மாடல்களில் புது அத்தியாயத்தை திறந்துவிட்டுள்ளது. அலுமினியம் ரிங் கேமரா டிசைனில் டிரிபிள் ரியர் செட்டப் கிடைக்கிறது. நத்திங் போன் 2ஏ மாடலில் இருந்து கிளிப் எல்இடி (Glyph LED) டிசைன் இதில் மாற்றப்பட்டுள்ளது. மூன்று ஸ்ட்ரிப் எல்இடி கிடைக்கிறது. கூடுதலாக ஒரு பட்டன் இருக்கிறது.
இது பவர் பட்டனுக்கு கீழே இது பேக் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் டிசைன் அடங்கிய போட்டோக்கள் வெளியாகி இருக்கின்றன. இப்போது, கேமரா பீச்சர்களை பார்ப்போம். நத்திங் சீரிஸ் போன்களில் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய மாடல்கள் அறிமுகமாக இருக்கின்றன. இரண்டுக்கும் சேர்ந்தே பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆகவே, வெளியீட்டுக்கு பிறகு அதில் மாற்றம் இருக்கலாம். இந்த நத்திங் போன் 3ஏ சீரிஸ் போன்களில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. சோனி சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவிலும் சோனி சென்சார் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 6X லாஸ்லெஸ் ஜூமிங் கிடைக்கிறது. அதேபோல 60X அல்ட்ரா ஜூமிங் வருகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
50W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி பேக் செய்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.72 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது. 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் வர இருக்கிறது. 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி வருகிறது.
நத்திங் போன் 3ஏ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,600ஆக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல நத்திங் போன் 3ஏ ப்ரோ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,400ஆக இருக்க வாய்ப்புள்ளது. கேமரா மற்றும் டிசைன் விவரங்களை தவிர மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. அதிகாரப்பூர்வமானவை அல்ல.