ARTICLE AD BOX
மார்ச் 20 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. புதிய Oppo போன்கள் ரெடி.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி (Oppo F29 Pro 5G) மற்றும் ஒப்போ எப்29 5ஜி (Oppo F29 5G) ஸ்மார்ட்போன்களை வரும் மார்ச் 20-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுகத்திற்கு முன்பு ஆன்லைனில் இந்த ஒப்போ எப்29 சீரிஸ் (OPPO F29 series) போன்களில் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ எப்29 5ஜி அம்சங்கள் (Oppo F29 Pro 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 எஸ்ஒசி(Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் உடன் ஒப்போ எப்29 5ஜி அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் ஒப்போ எப்29 5ஜி போன் வெளிவரும். அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய போன் விற்பனைக்கு வரும். மேலும் IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த போனில் வருகிறது.
50எம்பி பிரைமரி கேமரெ + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒப்போ எப்29 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு 6500mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் வசதி இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது.
ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Oppo F29 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 Energy SoC)சிப்செட் உடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதி இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிமைரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 16எம்பி செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி போனில் உள்ளன.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ஒப்போ எப்29 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒப்போ எப்29 5ஜி போன் ஆனது ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.