புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: பிரேமலதா வரவேற்பு

4 days ago
ARTICLE AD BOX

Published : 20 Feb 2025 05:45 AM
Last Updated : 20 Feb 2025 05:45 AM

புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: பிரேமலதா வரவேற்பு

<?php // } ?>

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா வரவேற்பு தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசாய மக்களுக்​கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்​துள்ளது வரவேற்​கத்​தக்​கது. அதன்படி மொத்தம் 5.18 லட்சம் விவசா​யிகள் பயன்​பெறும் வகையில் ரூ.498.80 கோடி ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்​திருக்​கிறது. இந்த அறிவிப்​பானது ஒட்டுமொத்த விவசாய மக்களின் வயிற்றில் பால்​வார்க்​கும் செய்தி​யாகும்.

விழுப்பு​ரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடு​துறை போன்ற பகுதி​களில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளை​யும், மழை வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளை​யும் தேமுதிக சார்பாக சென்று பார்​வை​யிட்டு தமிழக அரசிடம் நிவாரணத் தொகையை கட்டாயம் வழங்க வேண்​டும் என தொடர்ந்து வலியுறுத்​தினேன்.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளுக்​கும் நிவாரண தொகையை வழங்க இருப்பது மகிழ்ச்​சி அளிக்கிறது. அத்தொகையை உடனடியாக வங்கிக் கணக்​குக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும். தமிழக அரசுக்கு தேமு​திக சார்​பில் மன​மார்ந்த வாழ்த்​து​கள். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article