ARTICLE AD BOX
பிடிச்ச மாடலை வட்டம் போட்டு தூக்குங்க.. ரூ.5999 முதல் Smart TV.. 75 இன்ச் மாடல் கூட கம்மி விலை.. எந்த மாடல்?
ஸ்மார்ட் டிவி பிரியர்களுக்கு விருந்து வைத்தது போல, புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடியை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ரூ. 5999 விலை முதல் ரூ. 70,000 விலை ரேஞ்சிற்குள் வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். உங்கள் வீட்டிற்கு புது டிவி வாங்கும் ஐடியா இருந்தால் இந்த பதிவில் உள்ள மாடல்களை கருத்தில்கொள்ளலாம்.
1. ப்ளூபங்க்ட் 75" இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 75" inch Smart TV):
ஹாலில் பெரிய டிஸ்பிளேவுடன் பெரிய சைஸ் டிவியை குறைந்த செலவில் வாங்கி மாட்ட நினைத்தவர்களுக்கான TV தான் இது. இந்த டிவி மீது பிளிப்கார்ட் நிறுவனம் இப்போது சலுகை இந்த டிவி மாடலை வெறும் ரூ. 74,999 விலைக்கு வழங்குகிறது. இதன் அசல் விலை ரூ. 1,49,999 ஆகும். முழுமையாக 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ப்ளூபங்க்ட் 65 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 65" inch Smart TV):
மேலே குறிப்பிடப்பட்ட மாடலை விட குறைந்த விலையுடன் ஸ்மார்ட் டிவி மாடலை தேடுபவர்கள் இந்த 65 இன்ச் மாடலை தேர்வு செய்யலாம். இதன் அசல் விலை ரூ. 75,999 என்றாலும் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 39,999 விலையில் வாங்க கிடைக்கிறது.
3. ப்ளூபங்க்ட் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 55" inch Smart TV):
இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் அசல் விலை ரூ. 55999 ஆகும். ஆனால் தற்போது சிறப்பு சலுகையாக இதன் மீது 47% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த மாடலை வெறும் ரூ. 29,599 விலையில் வாங்கலாம்.
4. ப்ளூபங்க்ட் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 50" inch Smart TV):
நீங்கள் ஓரளவிற்கு பெரிய டிஸ்பிளேவுடன் புது ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த ப்ளூபங்க்ட் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி சரியான தேர்வாக இருக்கிறது. இதன் சலுகை விலை தற்போது ரூ.26,999 மட்டுமே. இதன் அசல் விலை ரூ.41,999 ஆகும்.
5. ப்ளூபங்க்ட் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (Blaupunkt 43" inch Smart TV):
அதிக செலவே இல்லாமல் உங்கள் அறைக்கு ஏற்ற அளவில் வழக்கமான ஒரு 43 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி வாங்க ஆசைப்பட்டால் இந்த மாடலை தேர்வு செய்வது சிறந்தது. இதன் அசல் விலை ரூ. 33,999 என்றாலும், தற்போது சலுகையுடன் வெறும் ரூ. 21,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
இது எதுவுமே எங்கள் பட்ஜெட் இல்லை, இப்போதைக்கு படம் பார்க்க சிறிய சைஸ் டிஸ்பிளே டிவியாக பாக்கெட் பிரெண்ட்லி பர்ச்சேஸ் ஆக அமையும் டிவி மாடல்களை தேடுகிறீர்கள் என்றால், கீழே வரும் இரண்டு மாடல்கள் தான் சரியான தேர்வாக அமையும்.
6. ப்ளூபங்க்ட் 24 சிக்மா 707 ஸ்மார்ட் டிவி (Blaupunkt's 24Sigma707 smart TV):
இதுவொரு 24" இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட மாடலாகும். இது தற்போது சிறப்பு சலுகைக்கு பிறகு வெறும் ரூ. 5,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 10,999 என்று பிளிப்கார்ட் பட்டியலிட்டுள்ளது.
7. தாம்சன் 24 ஆல்பா 001 ஸ்மார்ட் டிவி (Thomson's 24Alpha001 smart TV):
இதுவும் 24" இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட மாடல் தான், இருப்பினும் இது தாம்சன் பிராண்டில் இருந்து வருகிறது. இதன் அசல் விலை ரூ. 9,999 என்றாலும் தற்போது ரூ. 5,999 விலையில் வாங்க கிடைக்கிறது.